பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் & 13

மயில் தங்கியிருக்கும் மலர்கள் நிரம்பப் பெற்றுள்ள ஊரன், முன் நாள் செய்த சூளுறவு இப்போது பொய்யாது ஒழிக என்று விரும்பி ஒழுகினோம்” என்றாள் தோழி.

9. பழிச்சொல் ஒழிக

‘வாழி ஆதன், வாழி அவனி நன்று பெரிது சிறக்க தீது இல்லாகுக! என வேட்டோளே, யாயே, யாமே, ‘கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் தண் துறை ஊரன் கேண்மை அம்பல் ஆகற்க என வேட்டேமே - ஜங் 9 “தலைவ! நின்னை எம் தலைவி எதிர்ப்பட்ட பொழுதே, அவள் இல்லறமே நினைந்தாள். ஆதன் அவினி வாழ்க! நன்று மிகவும் பெருகுக! தீது சிறிதும் இல்லையாகுக! என இங்ஙனம் எண்ணி ஒழுகினாள். கயல்மீனை உண்ட நாரை வைக்கோற் போரில் தங்கும் குளிர்ந்த துறையையுடைய ஊரன் நட்பு அம்பலாக ஆகாது போக என்று யாங்கள் விரும்பினோம் என்று தோழி தலைவனை நோக்கி யுரைத்தாள்.

10. நின்னொடு கொண்டு செல்க!

‘வாழி ஆதன், வாழி அவனி மாரி வாய்க்க வளம் நனி சிறக்கட் என வேட்டோளே, யாயே, யாமே, ‘பூத்த மாஅத்துப் புலால்அம் சிறு மீன் தண் துறை ஊரன் தன்னொடு கொண்டனன் செல்க’ என வேட்டேமே. - ஐங் 10 “எம் தலைவியான இவள் நின்னைக் கண்டு கூடிய போதே, நீ மணந்து கொண்டாய் என எண்ணி, ‘ஆதன் அவினி வாழ்க! மழை தட்டாது பொழிக! வளங்கள் மிக உண்டாகுக என்று இல்லறத்துக்கு வேண்டியவற்றை விரும்பி ஒழுகினாள். நீ தலைவியை மணந்து கொள்ள நினையா யானால் பூத்த மாவையும், புலால் நாற்றம் உடைய மீனை யும் உடை குளிர்ந்த துறையையுடைய ஊரனே, இவளை