பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


 தி. அன்பொடு புணர்ந்த ஐந்தினை - மருதம்

யுடைய ஊரன், இவளை விரைந்து மணந்து கொள்க என்றும், அவன் மணந்து கொள்ள வேண்டும் என வேண்டிய போது எம் தந்தையும் மறுக்காதவனாய்க் கொடுப்பானாகுக என்றும் யாங்கள் விரும்பியிருந்தோம்” என்றாள் தோழி.

7. மணங் கொண்டு செல்க

‘வாழி ஆதன், வாழி அவனி - அறம் நனி சிறக்க அல்லது கெடுக! என வேட்டோளே, யாயே, யாமே, உளைப் பூ மருதத்துக் கிளைக் குருகு இருக்கும் தண் துறை ஊரன் தன்ஊர்க் கொண்டளன் செல்க’ என வேட்டேமே! - ஐங் 7 “தலைவ! நின்னை எம் தலைவி கண்ட போதே நீ அவளை மணந்து கொண்டாய் என எண்ணினாள். ஆதன் அவினி வாழ்க, அறம் மிகவும் ஓங்குக: தீமை முழுவதும் கெடுக என்று விரும்பி இல்லறத்தை வேண்டி ஒழுகினாள். நாங்களோ, உளை பொருந்திய பூக்களையுடைய மருத மரத்தில் குருகுப்பறவைகள் தம் சுற்றம் சூழ இருக்கும் குளிர்ந்த துறையையுடைய ஊரன் இவளைத் தன்னுடன் கொண்டு செல்வானாக என வேண்டி இருந்தோம்” என்றாள் தோழி.

8. உறுதி பொய்யாது ஒழிக! ‘வாழி ஆதன், வாழி அவனி அரசு முறை செய்க களவு இல்லாகுக! என வேட்டோளே, யாயே, யாமே, அலங்குசினை மாஅத்து அணி மயில் இருக்கும் பூக் களுல் ஊரன் சூள் இவண் வாய்ப்பதாக என வேட்டேமே! - ஐங் 8 “எம் தலைவி நின்னை எதிர்ப்பட்டவன்றே கற்புக் கடம் பூண்டாள். அவ் ஒழுக்கத்துக்கு ஏற்பனவற்றை நினைந்தாள். ஆதன் அவினி வாழ்க மன்னன் முறை செய்க களவு முதலிய குற்றங்கள் நிகழாமல் ஒழிக! என்றும் எண்ணி விரும்பி ஒழுகினாள். அசையும் தளிரையுடைய மாமரத்தில் அழகிய