பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

143


பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின் நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர! பொய்யால், அறிவென் நின் மாயம். அதுவே கையகப்பட்டமை அறியாய், நெருநை மை எழில் உண்கண் மடந்தையொடு வையை ஏர் தரு புதுப்புனல் உரிதினின் நுகர்ந்து, பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது கவ்வை ஆகின்றால், பெரிதே காண்தகத் தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி, கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளுர், திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய அறனிலாளன், ‘அறியேன் என்ற திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய், முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி, நீறு தலைப்பெய்த ஞான்றை, வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே. - மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் அக 256 ஒன்றுடன் ஒன்று பின்னிய துறுகளைக் கொண்ட வள்ளைக் கொடியின் நீண்ட இலைச் செறிவு. அதில் மடிந்து கிடக்கும் உறக்கத்தை வெறுத்த வன்மையான நகத்தையுடைய ஆமை. அஃது ஒலித்தல் செய்யும் பரற்களின் வழியே போய் அகன்ற நீர்த்துறையில் தன் பிளவுபட்டவாய் நிறைந்த பனங் கள் ஒழுக்கினின் பெருக்கை உண்ட களிப்புடன் செல்லும் நடையுடன் வயல்களைக் கலக்கும். பின் அதன் பக்கத்தில் உள்ள ஆம்பலின் மென்மையான இலைக்குள் ஒடுங்கிக் கிடக்கும். இவ் இயல்பு பொருந்திய நாட்டை யுடையவனே!

நீ பொய் சொல்லாதே, உன் வஞ்சத்தை நான் நன்றாக அறிவேன். உன் பரத்தைமை வெளிப்பட்டதை நீ அறிய மாட்டாய். நேற்று மை பூசப்பட்ட கண்களை உடைய பரத்தையுடன் வையை ஆற்றின் அழகுமிக்க புதிய நீரில் உரிமையுடன் இன்பம் நுகர்ந்தனை! அதனைப் பரத்தையர் கூட்டம் ஊரார் அறியாமல் மறைத்தனர். ஆயினும் அது