பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

25


திருத்திழைப்பணைத் தோள் நெகிழப்,

பிரிந்தனன் ஆயினும், பிரியலன் மன்னே. - ஜங் 39

“தோழியே நான் சொல்வதைக் கேள்! ஊரன் விருப்பம் ஊட்டும் நம்முடைய மார்பகம் முழுவதும் சேரும்படி தழுவிப் பின்பு நம்மிடத்தினின்று அழகிய இழையணிந்த தோள்கள் நெகிழ்ந்து மெலியும்படி பிரிந்தானாயினும் மனத்தில் இடையறவு இல்லாது நிற்கின்றான். ஆதலால் அவன் நம்மிடமிருந்து பிரிந்தவன் அல்லன்” என்று தலை மகளுக்குப் பக்கத்தில் உள்ளவர் கேட்பப் பரத்தை தோழியை நோக்கிக் கூறினாள். -

40. உரிமைப் பெண்டிர் ஊரில் தங்கினர்

‘அம்ம வாழி, தோழி மகிழ்நன் ஒண் தொடி முன்கை யாம் அழப்பிரிந்து தன் பெண்டிர் ஊர் இறை கொண்டனன் என்ப, கெண்டை பாய்தர அவிழ்ந்த வண்டு பிணி ஆம்பல் நாடுகிழவோனே. - ஐங் 40 பரத்தை, “தோழியே கேள், கெண்டை மீன் பாய்வதால் மலர்ந்த வண்டு விரும்பும் ஆம்பல் மிக்க நாடு உடையவன் தலைவன். அவன் ஒளியுடைய தொடியை அணிந்த முன் கையையுடைய யாம் அழும்படி பிரிந்து போய், தன் மனைவி வாழும் வீட்டை அடைந்து பிரியாமல் அங்கே தங்கினான் என அயற் பரத்தையர் உரைப்பர். இஃது ஏன்? கூறுக” எனத் தன் தோழியை நோக்கிச் சொன்னாள்.

4) 6)<v 41. மேனி ஒளி மாற்றினான் ‘தன் பார்ப்புத் தின்னும் அன்பு இன் முதலையொடு வெண் பூம் பொய்கைத்து, அவன் ஊர் என்ப; அதனால் தன் சொல் உணர்ந்தோர் மேனி பொன் போல் செய்யும் ஊர்கிழவோனே. - ஐங் 41 தலைவி, “தான் ஈன்ற பார்ப்பையே உண்பது அன்பு இல்லாத முதலை, அவற்றுடன் வெண்மையான மலர்கள்