பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

65


129. கடமையைச் செய்வோம்

இது மற்று - எவனோ - தோழி துனியிடை இன்னர் என்னும் இன்னாக் கிளவி - இரு மருப்பு எருமை ஈன்றணிக் காரான் உழவன் யாத்த குழவியின் அகலாது, பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன் திரு மனைப் பல் கடம் பூண்ட பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே

- கிள்ளிமங்கலங்கிழார் குறு 181 “தோழி, பெரிய கொம்புகளை உடைய அணித்தே கன்றினை ஈன்ற கரிய எருமையானது, உழவனால் கட்டப் பட்ட தன் கன்றின் பக்கத்தில் இருந்து அகன்று செல்லாமல் அருகிலுள்ள பசிய புல்லை மேய்வதற்கு இடமாகிய ஊரை உடைய தலைவனது, செல்வத்தை உடைய மனை வாழ்வுக் குரிய பல கடப்பாடுகளைக் கொண்ட பெரிய முதிய பெண்டிராகிய நமக்குப் புலவிக் காலத்தினிடையே தலைவர் இத் தன்மையர் என்று சொல்லுகின்ற, இனிமையில்லாத பேச்சால் என்ன பயன்?” என்று தலைவனைக் குறை கூற வேண்டா எனத் தலைவி வேண்டினாள்.

130. உம்மை ஏற்றுக் கொள்வது எப்படி? வேம்பின் பைங் காய் என் தோழி தரினே, தேம் பூங் கட்டி என்றனிர் இனியே, பாரி பறம்பின் பணிச்சுனைத் தெண்ணிர் ஐதஇத் திங்கள் தண்ணியதரினும், வெய்ய உவர்க்கும் என்றனிர் ஐய! - அற்றால் அன்பின் பாலே.

- மிளைக் கந்தன் குறு 196 ‘ஐயனே! என் தோழியாகிய தலைவி முன்பு வேம்பினது பசிய காயைத் தந்தால் கூட இனிதான பொலிவுபெற்ற வெல்லக்கட்டி என்று பாராட்டிக் கூறினர். இப்பொழுது பாரி வள்ளலின் பறம்பு மலையில் உள்ள குளிர்ந்த சுனை யில் உள்ள தேளிந்த நீரைத் தந்தாலும் வெப்பமுடையது,