பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


80 தி. அன்பொடு புணர்ந்த ஐந்தினை - மருதம்

நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின், கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று என, ‘யானது பசலை என்றனன் அதன் எதிர், “நாண் இலை, எலுவ என்று வந்திசினே - செறுநரும் விழையும் செம்மலோன் என, நறு நுதல் அரிவை போற்றேன், சிறுமை பெருமையின் காணாது துணிந்தே.

- மருதம் பாடிய இளங்கடுங்கோ நற் 50 “அன்னாய், யான் அறியாமையினால் அச்சத்தோடு சென்று கொண்டிருந்தேன். காதணியைக் கையிற் கொண்ட வனாய், மாலையை உடையவனாய்ச் சிறிய பசிய வளையல் களையுடையவனாய்த் தலைவன் விழாக் கொண்டாடும் இடத்திற்குத் துணங்கைக் கூத்து ஆடுவோர்க்குத் தலைக்கு கொடுக்கச் சென்று கொண்டிருந்தான். மிகவும் நீண்ட தெரு முடிந்த இடத்தில் பெண்கள் துணங்கை காணத் தங்கும் வளைந்த இடத்தில் இப்போது நொதுமலாளன் ஆகவிருக்கும் தலைவன் விரைவில் வந்து எதிர்ப்பட்டான். அப்போது பார்த்த யான், “உன்னைக் கேட்பாருண்டா? இல்லையா? நீயே அறிந்தால் போதும்” என்று கூறினேன். அப்போது அவன் என்னை அறியாமல், ‘யாண்டையது பசலை” என்றனன். அதற்கு எதிராக, நண்ப! நீ நாணம் இல்லாதவன்’ என்று கூறி வந்துவிட்டேன். நறிய நெற்றியையுடைய பெண்ணே; அவன் பகைவரும் விரும்பும் தலைமையையுடையவன் என்பதைப் போற்றாது என் சிறுமை பெரிதாகலான் ஆராயாது துணிந்து அவ்வாறு கூறி வந்தேன்” என்று தலைவனால் அனுப்பப்பட்ட பாணனை வாயில் மறுத்துத் தோழி கூறினாள்.

155. கோரையும் நெய்தலும் வேண்டும்

மலை கண்டன்ன நிலை புணர் நிவப்பின் பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ கண்படை பெறாஅது, தண் புலர் விடியல், கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையோடு புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு, கவர் படு கையை கழும மாந்தி,