பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


96 தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர் வாளை பிறழும் ஊரற்கு, நாளை மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே! தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி உடன்பட்டு, ஒராத் தாயரொடு ஒழியுடன் சொல்லலைகொல்லோ நீயே - வல்லைக், களிறு பெறு வல்சிப் பாணன் கையதை வள் உயிர்த் தண்ணுமை போல, உள் யாதும் இல்லது ஒர் போர்வை'அம் சொல்லே?

  • - பரணர் நற் 310 “விளக்குப் போல ஒளிவிடக் கூடிய தாமரை மலரும் ஆண் யானையின் செவிபோன்ற தாமரை இலையும் விளங்க வுள்ள ஆழமான பொய்கையில் நீருண்ணும் துறையில் பெண்கள் அஞ்சியோடும்படி வாளைமீன் துள்ளும் ஊரனுக்கு ஒரு நாளைக்கு ஒரு பரத்தையைக் கொணர்ந்து கொடுக்க ஏற்றுக்கொண்ட அறியாமையுடைய விறலியே, மெய்ம்மை தொலைந்த உன் நாவினால் சொல்லிய நிலையற்ற குறு மொழிக்கு உடன்பட்டு ஆராயாத பரத்தையரின் தாய்மாரிடம் ஒரு சார்பு எய்தி, யானைகளைப் பரிசிலாகப் பெற்று உணவைப் பெறும் பாணனது கையிலுள்ள வளம் பொருந்திய ஒலியையுடைய தண்ணுமை போல உள்ளே யாதும் இல்லாத - ஒரு போர்வையால் மறைத்திருப்பது போன்ற - அழகிய சொற்களை நீ விரைவாகச் சொல்வாயல்லையோ?” என்று பரத்தையிடம் பிரிந்து வந்த தலைவன், தலைவியிடம் தூதாக விடுத்த விறலி எதிர்த்து இவ்வாறு கூறினாள்.

174. இவனையும் கைப்பற்றினள் ‘விழவும் மூழ்த்தன்று முழவும் தூங்கின்று; எவன் குறித்தனள்கொல்?’ என்றி.ஆயின் - தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின், இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல் ஒரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில், காரி புக்க நேரார் புலம்போல், கல்லென்றன்றால், ஊரே, அதற்கொண்டு,