பக்கம்:அபிதான சிந்தாமணி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடவுள் துணை

அபிதான சிந்தாமணி


கடவுள் வாழ்த்து

கலிநிலைத்துறை

பொன்னே மணக்கும் புவிபுரக்கும் புரவலர்க்குப் புடவிமிசை
தன்னே ரில்லாத் தவமணக்குந் தவத்தினார்க டகுங்குணத்துச்
சொன்னேர் பொருளும் யாப்பணியுந் துகடீர்புலவர் வாய்மணக்கு
மென்னேர் மனத்தி லெஞ்ஞான்று மிறைபவன்பதமே மணந்தருமால்.

அகத்தியமுனிவர்

அகத்தியமுனிவர்—1 தாரகன் முதலிய அரக்கர் உலகை வருத்த அவர்களை நிவர்த்திக்க, இந்திரன், அக்நி, வாயு முதலியவர்களுடன் கூடிப் பூமியில் வந்தனன். அதைக் கண்டு அசுரர் கடலில் ஒளித்தனர். ஒளித்த அசுரர், தேவர்களை வருத்த உபாயந்தேடுகையில் அக்நி, அவர்களுடைய துராலோசனையையறியாமல் அசுரர் கடலிற் பயந்து ஒளித்தாராதலின் வருத்தலா காதென முயற்சியின்றி யிருந்தனன். பின் அசுரர், காலாவதியிற்பூமியில்வந்து தேவர், மக்கள், நரகர், இருடிகள் முதலியவர்களை வருத்த இந்திரன், மருத்துக்களோடு கூடிய அக்நியைப் பார்த்து நீ சும்மாவிருந்தமையால் இத்துன்பம் விளைந்தது. ஆகையால் கடலிலுள்ள நீரை வறட்டின் அசுரர் அகப்பட்டு நம்மாலழிவரென அக்நி, இந்திரனைப் பார்த்து அசுரர் பொருட்டுக் கடல்நீரை வறளச் செய்தால் சலரங்கள் அழியுமென்று கூற, இந்திரன் கோபித்து நீ என் சொல்லை மறுத்தனையாதலால், வாயுவுடன் கூடிப் பூமியிற்போய்க் கும்பத்திற்பிறந்து கடனீரெல்லாங் குடிக்க என்றனன். பிறகு தேவ சரீரங் கொண்ட அக்நி, மருத்துக்களுடன் கூடிப் பூமியில் விழுந்து அகத்தியனாயினான். எவ்வாறெனில், பூர்வம் விஷ்ணுமூர்த்தி, தருமன் குமரனாய்க் கந்தமாதன பருவதத்தில் தவஞ் செய்கையில், அத்தவத்தைக் கெடுக்க, இந்திரன், அப்சரசுக்களை யனுப்ப, அத்தபோதனர், சலிக்காமல் தம் தொடையினின்றும் அதிரூபலாவண்யத்துடன் ஒரு பெண்ணை சிருட்டித்து ஊர்வசியெனப் பெயரிட்டனர். அந்த ஊர்வசியை மித்திரன் மணந்து அவளோடு கூடியிருக்கையில் வருணன், அவளை விரும்பினன். அதற்கு அவள், புன்னகையுடன், என்னையொருவன் மணந்திருக்கையில், அந்நியன் விரும்பலாமோவென, வருணன், அவளைப் பார்த்து ஆயின் அம்மித்திரனுடன் நீ கூடியிருக்கையில் உன் எண்ணமாத்திரம் என்னிடத்தில் வைக்க என, அதற்கு ஒப்புக்கொண்டு மித்திரனுடன் கலந்திருந்தனள். இதனை ஞானதிருஷ்டியால் அறிந்த மித்திரன், ஊர்வசியைப் பார்த்து, நீ, வேறு எண்ணத்துடன் என்னிடமிருந்தனையாகையாற் பூமியில் மனுஷப் பிறவியடைந்து புரூவரன் தேவியாக எனச் சாபமிட்டனன். இவ்வகைப் பட்ட ஊர்வசியின் மோகத்தால் மித்திரா வருணர்க்கு வெளிப்பட்ட ரேதஸு ஒரு கும்பத்திலடைபட, அதிலிருந்து நிமி பிறந்தனன். அந்த நிமி அநேக பெண்களுடன் கூடி விளையாடுகையில் வசிட்ட முனிவர்வர, அவரை அவன் மரியாதை செய்யாததனால் அவர் கோபித்து நீ தேகமில்லாதவனாக எனச் சபித்தனர். அச்சாபஞ் சகியாத நிமி, வசிட்டரையும் அவ்வாறு தேகமில்லாதிருக்க சபித்தனன். இவ்வகை ஒருவர்க்கொருவர் சாபமேற்று சிமி பிரமனிடத்திற்போகப் பிரமன், நிமியை நேத்-