பக்கம்:அபிதான சிந்தாமணி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்தியமுனிவர்

2

அகத்தியமுனிவர்


திரத்தில் வசிக்கச் செய்தனன். அது காரணமாக நிமிஷம் உண்டாயிற்று. பிறகு நிமிசாபத்தால் தேகமிழந்த வசிட்டர், மித்திராவருண வீரியமுள்ள கும்பத்திலிருந்து முதலினும், இரண்டாவது சதுர்புஜத்துடன் கமண்டலங் கொண்டவராய் அகத்தியரும், பிறந்து தவமியற்றி, தாரகாசுரன் முதலியவர்களைக் கொல்லுதல், வேண்டிச் சமுத்திரபானஞ் செய்து, இரண்டாவது மிருத்துயுவை நியமித்து, கடலிற் பிறந்த காலகூட விஷத்தை வியர்த்தமாக்கியிருக்கையில் இவரிடம் திரிமூர்த்திகள் வந்து உனக்கென்னவரம் வேண்டுமென்ன, 250000000000 கணக்குள்ள சிருட்டி கர்தாக்கள் மாறுமளவும் தக்ஷிணபதத்தில் ஆகாசவீதியிலிருக்க வரங்கேட்டுப் பெற்றனர். (மச்சபுராணம்). இவரைப் புலத்திய புத்திரர் என்றும் கூறுவர்.

2. வாதாபி, வில்வலன் என்னும் அரக்கர் இருவரில், வில்வலன் வேதியர் உருக்கொண்டு வழியிற்செல்லும் வேதியர் இருடிகள் முதலாயினரை விருந்திற்கு வலிய அழைத்துவந்து, வாதாபியை ஆடாக்கியறுத்துப் பாகஞ் செய்து விருந்தாக வந்தவரையுண்பித்து இறுதியில் வில்வலன் வாதாபியை அழைப்பன். அவனுண்டோர் வயிற்றைக் கிழித்து வெளிவர இறந்தவனை இவ்விரண்டு அரக்கருந் தின்று பசிதீர்வர். இவ்வகையியற்றும் இந்த அரக்கரது தீமைகளை இருடிகள் அகத்தியருடன் முறையிட, அகத்தியர், அவர்களிடம் விருந்தாக சென்றுண்டனர். வில்வலன் அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியைக் கூப்பிட, அகத்தியர் ‘வாதாபே ஜீர்ணோபவ’ என்று வயிற்றை தடவ, அரக்கனிறந்தனன். வாதாபி வராமை கண்ட அரக்கன். கோபித்து அகத்தியரையடிக்கச் செல்ல முனிவர், சினத்துடன் நோக்கிக் தருப்பையில் பாசுபதமந்திரமேவி அரக்கனைக் கொல்ல முயன்றனர். பின் வில்வலன், அகத்தியர் வேண்டிய பொருள்களைக் கொடுத்து உயிர்பிச்சையேற்றுப் பிழைத்தான் என்ப (பாரவன - பு)

3. சிவபிரான், பார்வதிதேவியாரைத் திருமணஞ்செய்த காலையில் தேவர் முதலியோர் வடதிசை நிறையத் தென் திசை யுயர்ந்ததால் சிவபிரான் கட்டளைப்படி அகத்தியர், தென்திசையிற் பொதிகைமலையிலிருக்க வருகையில் ஒரு மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த இருடி கூட்டங்களைப் பார்த்து நீங்களேன் இவ்வகைத் தொங்குகின்றீர்களென இருடிகள், எங்கள் சந்ததியில் அகத்தியன் என்ற ஒருவன் பிறந்து இல்லறமடையாது இருக்கின்றானாதலால் மறுமொழி கூற, அகத்தியர் கேட்டுத் திடுக்கிட, அவர்களைத் தன்னை சபியாதிருக்க வேண்டி, நானே அகத்தியன், அதிசீக்கிரத்தில் இல்லறமடைந்து உங்களை இத்துன்பத்தினின்று நீக்குகின்றேனென்று, விதர்ப்பநாடடைந்து, அவ்வரசன் யாகத்திற் பிறந்த உலோபாமுத்திரையை அதிக பொருள் தந்து மணந்து தாதைகளை சுவர்க்கமடைவித்தவர். (பார - வன )

4. இவர், தென்திசைநோக்கிச் செல்லுகையில் விந்தமலையின் மிகுதியைத் தேவர் அகத்தியருக்குக் கூறினர். அதைக் கேட்ட அகத்தியர், அவ்விடம் வருகையில் விந்தம், மேருவுடன் மாறுபட்டு வழியிலாது நிற்றலைக் கண்டு அதனிடஞ் சென்றனர். விந்தம் முனிவரை பணிய அகத்தியர், நாம் தென்றிசை நின்று மீளும் வரையில் இவ்வகை பணிந்திருக்கவென்று பொதிகையிலெழுந்தருளி இராவணன் நாடாளாமல் அவனை காந்தருவத் தாற் பிணித்தவர். (திருநெல்வேலிப்புராணம், தொல்காப்பியப் பாயிரம்)

5. தமிழ்நாட்டைக் கந்தமூர்த்தி அகத்தியருக்குக் கொடுக்க இருடி, பாண்டியனுக்குக் கொடுத்தனர். (நெல் - புரா)

6. அகத்தியருக்கு தாமிரபரணி சிவமூர்த்தியாற் கொடுக்கப்பட்டது.

7. மதியநந்தை யென்பவள், தவத்திற் கிடையூறு செய்ய, அவளை மனிதபிறவியடைய சபித்தவர்.

8. தேவர்களை வருத்தியவிருத்திராசுரன் இந்திரனது வச்சிராயுதத்திற்குப் பயந்து கடலில் ஒளிக்கத் தேவர் வேண்டுகோளாற் சமுத்திரஜலத்தை ஆபோசனஞ் செய்து, அவனை இந்திரன் கொலைபுரிய, மீண்டு ஜலத்தை விடுத்தவர். (திருவிளை)

9. சந்திரவம்சத்தரசனாகிய நகுஷன் என்போன், இந்திரபட்டமடைந்து புலோ மசையிடம் விரும்பங்கொண்டு அவளைக் கேட்க, அவள், சத்த இருடிகன் தாங்குஞ் சிவிகையிலிருந்து என்னிடம்வரின் அவ்வகை உடன்படுவேனென அவ்வாறே இருடிகன் தாங்கச் சிவிகையிலேறிச் செல்-