பக்கம்:அபிதா.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 113


யிலிருந்து குதிரைமேல் வீட்டுக்குத் திரும்பி வந்திருப்பான். முகத்தில் அவ்வளவு வெற்றி.

“என்னடா அம்பி இது?”

(ஒ! இவனும் ‘அம்பி'யா?)

“மலிவா வரும்போல இருக்கு. என்ன அபிதா வாங்கலாமா?”

மாமி எரிந்து விழுந்தாள்.

“அவளை என்ன கேள்வி: பெரிய மேரு”

“உன்னையென்ன கேள்வி வாங்கப் போறவன் நான்!”

“ஆமாம், என்னைக் கேட்பையா? நான் என்ன உன் குதிகாலில் ஈஷிய சாணிக்குச் சமானம்-”

“இதோ பார் அக்கா, இதனால்தான் எனக்கு இங்கே வரவே பிடிக்கமாட்டேங்கறது. உன் சண்டை ஸ்வாரஸ்யமாவேனுமிருக்கா, படு bore! வா அபிதா, பின்னால் ஏறு, நாம் போகலாம்!”

“நானா?” அபிதா பின்னடைந்தாள்.

“நீதான், நீயேதான்! பின் என்ன உன் சித்தியா? பயப்படாதே ஊம்- ஏறு!”

“நன்னாயிருக்குடா வயசுப் பெண்ணை நீ கூப்பிடற லக்ஷணம்!”

“நீ ஒருத்தியே உடன் பிறந்தாள் போதும்போல இருக்கே! நான் யாரு உன் தம்பி, இவளுக்கு மாமா!”

“இல்லை இல்லை நான் இவாளோடேயே வண்டியில் வரேன்.” -

அ- 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/119&oldid=1130654" இலிருந்து மீள்விக்கப்பட்டது