பக்கம்:அபிதா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10 0 லா. ச. ராமாமிருதம்


ஊரெல்லாம் தேடிவிட்டு, பிறகு கழனிக்கட்டில் துரவு கிணற்றில் கண்டெடுத்து உடலைத் தூக்கிக் கொண்டு வந்தார்களாம்.

எங்கள் ஊரில் பெண்கள் கேணியில் இறங்கிக் குளிப்பதுண்டு.

ஆனால் என் தாய்க்குப் பழக்கமில்லை. அவளுக்கு நீச்சலும் தெரியாது.

நாலுபேர் நாலுவிதமாகப் பேசிக்கொண்டனர்.

வயிற்றில் நான் நாலுமாதப் பூச்சியாயிருக்கையில், நடுநிசியில் எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கையில் அம்மாவின் கைவளையலைக் கழற்றிக் கொண்டு ஓடிவிட்ட என் அப்பன், நான் பிறந்து மாதம் பத்தாகியும் இன்னும் திரும்பவில்லை.

“தாம்பூலம் மாற்றிக்குமுன் என்னை ஒரு வார்த்தை கலந்திருந்தால் நான் தடுத்திருப்பேனே!” எனத் தவித்தவர் எத்தனைபேர்!

“எல்லாம் சொல்லிக்க வேண்டியதுதான்! ஏழை சொல் அம்பலத்திலேறுமா?” என்று ஒரு பொறுமல்.

“நமக்கேன் பாடு! ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கலியாணத்தைப் பண்ணுன்னு சாஸ்திரமே கட்டளையிருக்கு!” இப்படி ஒரு கக்ஷி தருமம் பேசிற்று.

“எப்பவுமே இப்படியே இருக்குமா? ஒரு முடிச்சைப் போட்டு வெச்சால் பையன் திருந்திடுவான்னு பார்த்தோம். மறைச்சு வெச்சுப் பண்ணிட்டோம்னு எங்களைக் குத்தம் சொல்ற நாக்கு அழுகித்தான் போகணும். பையன் இதுவரை எங்கள் கண்ணெதிரிலாவது உலாவிண்டிருந்தான், பொண்ணு எங்கள் வீட்டைக் கால் மிதிச்ச வேளை முதலுக்கே மோசம் வந்தாச்சு” என்று பிள்ளை வீட்டார் புலம்பினர்.

“இல்லாட்டா உங்கள் அந்தஸ்துக்கு இதுக்கு மேல் ஒஸ்தி என்ன எதிர்பார்த்தேள் சொல்லுங்களேன்! கேட்டுத்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/16&oldid=1125605" இலிருந்து மீள்விக்கப்பட்டது