பக்கம்:அபிதா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 37


அந்தத் தருண மகிமையில் ஒரே கணத்தில் அழித்து விடுவாள்.

கதவு திறக்கிறது. கூடவே கிண்கிணி என் இதயத்திலும் ஒரு-

நானே சரியில்லை. எனக்கே தெரிகிறது. நான் குடித்ததில்லை. ஆனால் அரைபோதையில் இருக்கிறேன். நெஞ்சிற்குள் பூக்கள் கொத்துக் கொத்தாய்க் குலுங்க, ஒரு கிளை அசைகிறது; உள்ளெலாம் 'கம்'-

சக்கு-

ஆமாம், சக்குவேதான்!

But my God! நான் கரடிமலையை விட்டே போக வில்லையா? இதுவரை எனக்கு நேர்ந்ததெல்லாம் வெறும் கனவுதானா? மனிதன் பிறவியெடுத்து வாழ்வோடு உறவாடி இறந்து போகும்வரை ஒரு ஜன்மா பூராவே கனவாய்க் கண்டு விழித்து எழுந்தும் விடமுடியும் என்பது உண்மைதானா? அப்படி ஆயின் எது கனவு? இதுவரை கண்டதா அல்ல இப்போ காண்பதா?

இல்லையேல் சக்குமட்டில் உருமாறா மார்க்கண்ட ரஹஸ்யம் எப்படிக் கண்டாள்? வயது இவளுக்கு மட்டும் நான் விட்டுப்போன சமயத்திலேயே எப்படி உறைந்து போயிற்று? கனவு என்பதென்ன? விழிப்பு என்பதென்ன?

நானே சரியாயில்லை. என்னுடைய இப்போதைய நிலையில் கோடுகள் கலைந்திருந்தன.

“சக்கு!”

அவள் பெயர் என் நெற்றி நரம்புகளில் புடைத்து, என்கண்களில் உருவாயிற்றோ என்னவோ வார்த்தையாக வெளிவரவில்லை. எனக்கு நா எழவில்லை.

ஆனால் அவள் கண்களில் அடையாளமில்லை. அன்னியனைக்காணும் திகைப்புடன், லேசான அச்சத்துடன், வெட்கத்துடன் பின்னடைந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/43&oldid=1126502" இலிருந்து மீள்விக்கப்பட்டது