பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xviii

பிங்கலை, பிணிக்கு மருந்து, புத்தி, புரத்தை; புவனம் காத்தவள், புவனம் பதினான்கையும் பூத்தவள், பூங்குயில், பூங்குழலாள், பூதங்களாகி விரிந்த அம்மை, பூரணாசல மங்கலை, பைங்கிளி, போகம், மங்கலை, மண்டலி, மணி, மணி புனைந்த அணி, மணியின் ஒளி, மதிச் செஞ்சடையாள், மருள், மலைமகள், மறையின் அரும்பொருள், மறையின் பரிமளம், மனோன்மணி, மாத்தவள், மாதங்கி, மாதுளம்பூ நிறத்தவள், மாலினி, மின்கொடி, முக்கண்ணி, முகுந்தற்கு இளையவள், முகிழ்நகை, முத்தி, முத்திக்கு வித்து, முதல்வி, முப்புரை, மூவருக்கும் அன்னை, மெல்லியல், யாமளவல்லி, யாமளை, வஞ்சர் நெஞ்சடையாள், வல்லி, வாணுதல், வாணுதற் கண்ணி, வாராகி, விழுப்பொருள், வெளி, வெளியாள், வேதப்பரிபுரை முதலியன.

ஒன்றாகிப் பலவாகிய உருவம் உடையவளாகி இருந்தும் அம்பிகை அருவே உருவானவள். அகில சராசரங்களும் வானாதி பூதங்களுமாகி நின்றும், அவற்றினின்றும் நீங்கினவள். வேதத்தின் முதலும் இடையும், அந்தமும் பொருளுமாக இருந்தும் மறைதேடநின்றவள். பிணியாகி நலிவாளும் அவள்; அப்பிணிக்கு மருந்தாகி அருள் மலிவாளும் அப்பிராட்டியே. பொருளாகவும் அப்பொருள் முடிக்கும் போகமாகவும் அப்போகத்தைக் செய்யும் மாயையாகவும் மாயா மலத்தை நீக்கும் தெருளாகவும் இலங்குவாள். ஆனந்தமாய் அறிவாய் அமுதமாய் இன்பம் தருவாள். புத்தியும் முக்தியுமாவாள். உலகுக்கு மருந்தாகவும், அமரருக்கு விருந்தாகவும் உதவுவாள். இசை வடிவாய் நிற்பாள், ஒளியாய் ஒளிர்வாள்; வெளியாய் விரிவாள். திங்களுக்குள்ளிருந்து தண்ணொளி வீசுவாள்; செஞ்சுடருக்குள்ளிருந்து தேசு தருவாள், பிரமனிடம் கலைமகளாகவும், திருமாலிடம்