பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அபிராமி அந்தாதி

பொருண் முடிவு, தானாய்....... இடம்பிரியா வெம்பிராட்டி" (திருவிளையாடல், 4: 42.) அருளே: "அருளது சத்தி யாகு

மரன்றனக்கு” (சிவஞான சித்தியார்); “தயாமூர்த்தி" (லலிதா.581.) அன்றும்: உம், அசைநிலை. முத்தி ஆனந்தம்: "முத்தியும்" (23) என்பர் பின்; "முக்தி ரூபிணி", (லலிதா. 737.)

10

ஆனந்த மாய்என் அறிவாய்
நிறைந்த அமுதமுமாய்
வானந்த மான வடிவுடை
யாள்மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணார
விந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங் காம்எம்பி
ரான்முடிக் கண்ணியதே.


(உரை) ஆனந்த உருவமே தானாகி என் அறிவாகி நிரம்பிய அமுதம் போன்றவளாகி ஆகாசம் ஈறான பஞ்ச பூதங்களும் தன் வடிவாகப் பெற்ற தேவியினது, நான்கு வேதங்களுக்கும் முடிவாக நிற்கும் திருவடித்தாமரையானது, வெண்ணிறத்தையுடைய மயானத்தைத் தம்முடைய ஆடும் இடமாக உடைய எம்பெருமானாகிய சிவபிரானது திருமுடிமாலையாக உள்ளது.

ஆனந்தம் - ஆனந்த உருவம்; "பரமானந்தா" (லலிதா: - 252). அறிவித்தால் அறிவதே உயிர்த்தொழிலாதலின் அறிவாய் என்றார். அமுதமென்றது மரணமில்லாமையைக் குறித்து நின்று, நிலைபேறான உண்மையைப் புலப்படுத்தியது. எனவே சச்சிதானந்த உருவுடையாள் என்பதாயிற்று. வான் அந்தம் - பிருதுவி முதல் ஆகாசம் ஈறான; "உயிரொடு பூதமைந்து மொருமுத லாகின்ற உமை" (திருப்புகழ்). எல்லாம் நீறுபட்ட இடமாதலின் மயானத் தைத் தவளநிறக் கான் என்றார்; திருவெண்காடு