பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

39

பெறும் அன்பை மேற்கொள்ளுவதற்கு எண்ணிய எண்ணமன்றோ முற்பிறவிகளிலே செய்த புண்ணியத்தின் பயனாவது?

முற்பிறப்பில் புண்ணியம் செய்தாருக்கே இப் பிறப்பில் தேவியைத் தரிசித்து வழிபடும் பேறு கிடைக்கும் என்றபடி. அம்பிகைக்கு நெற்றிக் கண்ணோடு சேர்ந்து முக்கண் உளவாதலை, "ஒன்றோ டிரண்டு நயனங்களே" "முக்கண்ணியை" (73, 101) என்று பின்னர் வருதலால் உணரலாம். அண்ணியள் அல்லாத என்றது, நெடுந் தூரத்தில் இருப்பவளென்றபடி. விண்ணவர் பேணுதல்;4.கன்னி:8.

40

புண்ணியம் செய்தன மேமன
மேபுதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும்
கூடிநம் காரணத்தால்
நண்ணிஇங் கேவந்து தம்அடி
யார்கள் நடுஇருக்கப்
பண்ணிகம் சென்னியின் மேற்பத்ம
பாதம் பதித்திடவே.

(உரை) மனமே, அன்று அலர்ந்த புதிய குவளை மலரைப் போன்ற திருவிழிகளையுடைய அபிராமியும், அப்பிராட்டியின் செந்நிறத்தையுடைய பதியும் சேர்ந்து, நம்மை ஆட்கொள்ளும் காரணத்தால் நாம் இருக்கும் இடத்தை அணுகி வந்து, நம்மைத் தம் அடியார்களிடையே இருக்கும்படி திருவருள் பாவித்து, நம்முடைய தலையின் மேலே தம் திருவடி மலர்களைப் பதிப்பதற்கு உரிய புண்ணியச் செயலை முற்பிறவியில் செய்திருக்கின்றோம்; இது வியத்தற்குரியது.

செய்தனமே: வினாவும் ஆம்; மனத்தையும் உளப்படுத்தலின் தன்மைப் பன்மையிற் கூறினார். "குவளைக் கண்ணி கூறன் காண்க" என்பது திருவாசகம். செய்ய கணவர்:

அபிராமி—5