பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

அபிராமி அந்தாதி

நகிலாகிய குரும்பை யடையாளத்தை வைத்த பிராணேச வரியினுடைய தாமரை மலரைப்போன்ற சிவந்த கையிலுள்ள கரும்பு வில்லும், மலரம்புகளும் எக்காலத்திலும் என் மனத்துள்ளே இருப்பன வாகும்.

செஞ்சேவகம் - வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் வீரம்; "செஞ்சே வகஞ்செய்த சோழன் றிருக்குமர" (குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்). கரும்பும் மலரும் சிந்தையது: பன்மை ஒருமை மயக்கம்; தனித்தனியே கூட்டினும் அமையும்; தொகுதியொருமையுமாம்.

62

தேறும் படிசில ஏதுவும்
காட்டிமுன் செல்கதிக்குக்
கூறும் பொருள்குன்றிற் கொட்டும் -
தறிகுறிக் கும்சமயம்
ஆறும் தலைவி இவளாய்
இருப்ப தறிந்திருந்தும்
வேறும் சமயம்உண் டென்றுகொண்
டாடிய வீணருக்கே.

(உரை) பெரியோர்களால் எடுத்தோதப்படும் ஆறு சமயங்களுக்கும் தெய்வம் அபிராமியாகிய இவளாக இருப்பதை அறிந்திருந்தாலும், இவளையன்றி வேறு தெய்வத்தைக் கூறும் சமயமும் உண்டு என்று அதனைப் பாராட்டிய வீணர்களுக்கு அவர்கள் உண்மை தெளியும்படி சில பிரமாணங்களைக் காட்டி, அவர்கள் மேலே செல்லும் நற்கதிக்கு உபகாரமாக அறிவுறுத்தப்படும் பொருள்கள் மலைப் பாறையிலே அதனைத் தகர்க்கும் பொருட்டு முட்டும் மரத்தூணை ஒக்கும்.

எடுத்துரைப்பார். "தளர்க்கில அடைவதன்றி அவ்வீணர் உள்ளம் தெளியாரென்றபடி. சமயமாறும் தலைவி: "நாரணி பறத்தினாரி யாறுசமயத்தி” (திருப்புகழ்).

63