பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 அபிராமி அந்தாதி

எண்ணினார் போலும் தொடர்ந்து, இந்த உலகம் மட்டுமா? சகல புவனங்களும் உன்னுடைய படைப்பு அல்லவா? என்று நினைத்தார். மேல் ஏழு உலகம், கீழ் ஏழு உலகம் என்று பதினான்கு உலகங்களைச் சொல்வ துண்டு; அவை யாவும் தேவியின் படைப்புக்களே, :ஈரேழ் புவனமும் பூத்த உந்திக் கொங்கிவர் பூங்குழலாள்" (7.5) என்று பின்னே ஒரு பாட்டிலும் இந்தக் கருத்தைச் சொல்வார். லலிதாம்பிகையின் திரு நாமங்களாகிய ஜநநி, ப்ரஹ்மரூபா ஸ்ருஷ்டி கர்த்ரி என்பவை அம்பிகை படைப்புத் தொழிலைச் செய்பவ ளென்பதையும், பிரமனுடைய திருவுருவாக விளங்குபவள் என்பதையும் புலப்படுத்துகின்றன.

பிரமதேவனுக்குப் படைப்புத் தொழில் ஒன்றுதான் உண்டு. அம்பிகையோ அதனேடு தொடர்புடைய மற்றத் தொழில்களையும் புரிபவள். படைத்தலை அடுத்து வருவது காத்தல். அந்தத் தொழிலையும் அம்மை இயற்றுகிறாள். ..உலகத்தை அருள் நிரம்பிப் படைப்பது போலவே, அதனைப் பாதுகாக்கும் கடமையையும் பேரருளுடன் மேற் கொண்டிருக்கிறாள்.

3, பத்த வண்ணம் காத்தவளே!

பூத்தபடியே காத்தவள் என்றார். உலகத்தை உண்டாக்குவதற்குக் காரணமான பேரருளும் பேராற்ற லும் அதனைக் காப்பாற்றுவதற்கும் காரணமாக அமை கின்றன. தேவியே திருமாலை அதிஷ்டித்து நின்றுகாப்புத் தொழிலை நிகழ்த்துகிறாள். அதனால் அப்பெருமாட்டிக்கு விஷ்ணு ரூபிணி, கோப்த்ரி, கோவிந்த ரூபிணி என்ற திரு நாமங்கள் அமைந்தன. i

. இனி அடுத்த செயலாகிய அழித்தலையும் தேவியே செய்கிறாள். ருத்திரனுடைய சக்தியாக நின்று அகில