பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயமான வடிவு

வெளியாகவும் தக்துவக் கூட்டமாகவும் விரிந்த

பிராட்டி திருவுருவம் கொண்டு எல்லோருடைய உள்ளத் தையும் கொள்ளை கொள்ளும் பேரழகுடன் விளங்கு கிறாள். அவளுடைய எழில் நிரம்பிய திருமேனியில் அழகலை புரளுகிறது. அந்தச் செளந்தரிய லஹரியிலே சொக்கிப் பொகிறவர் பரமசிவனார்.

எம்பெருமாட்டியின் உருவப் பேரெழிலை எத்த そ னையோ கவிகள் வருணித்திருக்கிறார்கள். ஆனாலும் அதற்கு முடிவு கட்டினவர் யாருமில்லை. அப்பெருமாட் டியின் திருமேனி எழிலுக்கு உவமையேயில்லை. "அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி' என்று பாடுவார் அபிராழிபட்டர். -

அவளுடைய வடிவு காணக் காண வியப்பைத் தருவது உலகில் தூய அழகுடைய பொருள்களிலெல்லாம் அவளு டைய அருளின் தொடர்பு இருக்கும். வாயினால் புகழ்ந்து அறுதியிட்டுக் காட்டும் வடிவன்று, அவள் அழகுத்திரு வுருவம். அதனைக் கண்டு கருத்திலே மொண்டு வியப் புணர்ச்சியிலே ஒன்றி நிற்பதையன்றி வேறு செயலில்லை.

புதிய அழகைக் கண்டால் அதிசயமாகப் பார்ப்பது மனித இயல்பு. ஆனால் எல்லா அழகையும் அடக்கி மீதுார்ந்து நிற்கும் அன்னையின் வடிவழகு அதிசயங்களில் எல்லாம் மிக்க அதிசயம். இந்த அதிசய எழிலை ஒரு வகையில் வருணித்துப் பார்க்கலாம் என்று தொடங் கிெனார் அபிராமிபட்டர். முதலில் பொதுவாக, ""。舉。舉*