பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்த வெள்ளம் Գ#է

அவயவங்களையுட்ைய வடிவத்திலும், பூரீசக்கரம் முதலிய யந்திரங்களிலும் மந்திரங்களிலும் அவள் உறைந்து அன்பிக் களுக்கு அருள் செய்கிறாள். அம்பிகையின் அன்பர்கள் சச்கரபூஜை செய்யும் பழக்கமுள்ளவர்கள். அம்பிகையின் பல பல நிலைகளுக்கு ஏற்றபடி பல பல யந்திரங்கள் உண்டு. அவற்றில் ஒன்று நவகோண சக்கரம், வீற்றிருப் பாள் நவகோணத்திலே என்று வராகி மாலை பாடுகிறது. அபிராமிபட்டர் இந்தச் சக்கரத்தைக் குறிக்கிறார். தேஜோமயமான ஒன்பது கோணங்சளுடைய சக்கர்த்தில் ஆவாகனம் பண்ணி வழிபடுபவர்களுக்கு நலம் வழங்கு பவள் எம்பெருமாட்டி. - -

ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. பூரீ சக்கரத்தில் உள்ள ஒன்பது ஆவரணங்களையே ஒன்பது கோணமாகக் கொண்டு, ஒவ்வோர் ஆவரண மாகிய சக்கரத்திலும் இலங்குபவள் தேவி. இங்கே கோணம் என்பது ஆகுபெயராகக் கோணங்களையுடைய சக்கரத்தைக் குறித்ததாகக் கொள்ள வேண்டும்.

சகுண உபாசனையினால் தியானம் முறுகிவரும் என்பதை அறிந்த பெரியவர்கள் காட்டிய வழிகளில் உருவ வழி பாடும் யந்திர பூஜையும் முக்கியமானவை. அந்த இரண் டிலும் ஈடுபட்டவர் அபிராமிபட்டர். ஆதலின் இங்கே அந்த இரண்டையும் சொன்னார். -- *

வெளிநின்ற நின்திரு மேனியைப் பார்த்து என் விழியும்நெஞ்சும் களிகின்ற வெள்ளம் கரைகண்ட தில்லை; கருத்தினுள்ளே தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது:

என்ன திருவுளமோ? ஒளிகின்ற கோணங்கள் ஒன்பதும்

மேவி உறைபவளே! எழில்-12