பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 அபிராமி அந்தாதி

"ஒன்றே உடம்பு அங்கு இடும்பங்கு இரண்டே'

என்று குமரகுருபரர் பாடுகிறார். இப்படி அம்மையும் அப்பனும் ஒட்டி இருக்கும் திருக்கோலம் அர்த்தநாரீசுவர மூர்த்தம். அதனைச் சிவபெருமானுடைய திருக்கோலங் களில் ஒன்றாகக் கொள்வது அப்பனைப் போற்றும். பிள்ளைகளின் மரபு. ஆனால் அம்மையைப் போற்றுகிற வர்கள் அது அம்பிகையின் திருக்கோலம் என்பார்கள். இரண்டுக்கும் வேறுபாடு என்ன? சிவபெருமான் தம் வாமபாகத்தில் அம்பிகையைக் கொண்டிருக்கிறார்; அத. னால் அர்த்தநாரீசுவரர் என்ற திருநாமம் கொள்கிறார்’ என்பது சிவனடியார் சொல்லும் முறை. அம்மையின் அடியார்கள், அவளே தன் வலப்பாகத்தில் சிவபெருமானை வைத்திருக்கிறாள் என்று சொல்வார்கள், அதனால் அன்னையை அர்த்தேசுவர நாரி என்று புகழலாம் என்று. தோன்றுகிறது.

அர்த்தநாரீசுவரரானாலும், அர்த்தேசுவரதாரியா னாலும் கோலம் ஒன்றுதான். வலப்பக்கத்திலிருந்து பார்க்கிறவர்களுக்கு அர்த்தநாரீசுவரராகவும், இடப்பக் கத்திலிருந்து சேவிப்பவர்களுக்கு அர்த்தேசுவரநாரியாக வும் காட்சியளிப்பாள் போலும்!

இந்தத் திருக்கோலம் மிகப் பழைய வடிவம் என்று நூல்கள் கூறுகின்றன. சங்க நூலாகிய ஐங்குறுநூற்றில் எல்லா உலகமும் தோன்றுவதற்குக் காரணமான மூர்த்தி,

- மாதிருக்கும் பாதியனே என்று ஒரு பாட்டு வருகிறது. :

இந்தக் கோலத்தை மாணிக்கவாசகர் தொன்மைக் கோலம்’ என்கிறார். o .

அபிராமிபட்டர் முதலில் அந்தப் பழைய கோலத்தைத் தியானிக்கிறார். எம்பெருமாட்டியே, நீ எழுந்தருளி