பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவும் வண்ணமும் 191

லலிதா சகசிரங்ாமத்தில் வரும் திருநாமங்களால் தேவிக்கும் கலைகளுக்கும் உள்ள தொடர்பு நன்கு விளங்கும்.

கலா என்பது மயிலின் தோகைக்கும் பெயர். ஆதலின் அதனோடு சேர்த்து மயில் என்றார். 'கலாமயிற் கூத்தயர் குளிர்புனம்' (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்.)

இத்தகைய அன்னை சிவபிரானுடைய திருமேனியில் ஒரு பக்கத்தை உரிமையோடும் பெற்று ஆளுகிறாள். அவர் தம் தலையில் கங்கையைத் தரித்திருந்தாலும் அதனால் கோபம் கொள்ளாமல் அவரிடத்தினின்றும் நீங்காமல்

இருக்கிறாள். -

கங்கை எத்தகையது? என்னைத் தாங்குவார் யார்? என்ற அகந்தையோடு தாவி வந்தது; அலைகள் பொங்க ஆரவாரித்து வந்தது. அப்படி வந்தாலும் இறைவருடைய சடையிலே அது அடங்கித் தங்கியது. -- -

விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்

மண்ணுக் கடங்காமல் வந்தாலும்-பெண்ணை இடத்திலே வைத்தஇறைவர்தம் சடாம் குடத்திலே கங்கையடங் கும்

என்று பாடினார் காளமேகப் புலவர். தாவி வந்த கங்கை பயினிடம் பொங்கிய அலைகளெல்லாம் இறைவருடைய புரிந்த சடை ஒன்றில் அமைந்து, அலையாமல் தங்கி விட்டன. அதனால், -

தாவு கங்கை பொங்கு அலை

தங்கும் புரிசடையோன் என்கிறார் அபிராமிபட்டர். அத்தகைய இறைவருடைய ஒரு பக்கத்தில் இருந்து ஆளுகின்றாளாம் தேவி.

r r தாவுகங்கை பொங்கலை தங்கும் புரிசடைய்ோன்புடை

ஆளுடையான.