பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவும் வண்ணமும் 193.

செய்யாள் லலிதாம்பிகையின் நிறம் செம்மை, இதை முதற்பாட்டிலே, உதிக்கின்ற செங்கதிர் முதலிய உவமைகளால் புலப்படுத்தினார். -

மணிபூரக சக்கரத்தில் பத்து இதழையுடைய தாம ரையில் மூன்று முகங்களுடன் எழுந்தருளியிருக்கும். லாகினி யென்னும் கோலத்தில் அம்பிகை செந்நிற முடையவளாக இருப்பாள். அவளை ரக்தவர்ணா” என்று லலிதா சகசிரகாமம் போற்றுகிறது; அந்தக் கோல்த்தை எண்ணியதாகவும் கொள்ளலாம். . . . -- செய்யாள் என்பது திருமகளுக்கு ஒரு பெயர். செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்' என்பது குறள். அம்பிகையே திருமகளாக இருந்து விளங்குகிறாள் என்று சொல்வார்கள்; ஆதலின் இங்கே செய்யாள் என்பதற்குத் திருமகளாக நின்று நலம் செய்பவள் என்றும் பொருள் கொள்ளலாம்; மறைகின்ற வாரிதியோ' (20) என்று. முன்பாட்டில் சொன்னதையும் காண்க. o வெளியாள்-வெள்ளை நிறம் உடையவள். ஆக்ஞா சக்கரத்தில் இரண்டிதழ்க் கமலத்தில் ஆறு முகங்களுடன் எழுந்தருளிய அம்பிகைக்கு ஹாகினி என்று பெயர். அப்பெருமாட்டியின் நிறம் வெள்ளை. சுக்லவர்ணா என்று லலிதா சகசிரகாமம் பாராட்டும். o

கலைமகள் வெண்மையான நிறம் உடையவள். 'வெள்ளை உருப்பளிங்கு போல்வாள்' என்று கம்பர் பாடியிருக்கிறார். அம்பிகையே கலைம்க ளாகவும் இருத்தலின், வெளியாள் என்பதற்கு வெள்ளை நிறத்துடன் நாமகளாக இருக்கும் பிராட்டி என்றும் பொருள் கொள்ளலாம். -.

பசும்பெண் கொடி : பார்வதியின் நிறம் பச்சை. ஆதலின் மரகதவல்லி என்று தேவியைச் சொல்வது வழக்கம். - w r . . . . . .

எழில்-13