பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 .* அபிராமி அந்தாதி

அந்த மரங்கள், அது போலவே அன்னையும்.அன்பர்களின் தகுதியை நோக்கி அவர்களுக்கு உரிய பக்குவம் வரும் போது தன் அருளாகிய கனியை நல்குவாள் இது அவள் இயல்பு, ஆனால் இது என்னளவில் அமையவில்லை. நான் பக்குவம் அடைந்த பிறகு அம்பிகையின் அருள் பெறலாம் என்று இருந்தால், அது இந்தப் பிறவியில் நடக். கும் காரியம் அன்று. இந்தப் பிறவியில் என்ன? இன்னும் பல பல பிறவிகள் எடுத்தாலும் எனக்கு இந்தப் பக்குவம் வருமா என்று ஐயப்படுகிறேன். அத்தகைய தாழ்ந்த நில்ையில் இருந்த எனக்கு இந்த வஞ்சிக்கொம்பு பழுத்துக் கனியைத் தந்தது. இது பெரிய ஆச்சரியம் அல்லவா? ஆம்! இது உண்மையிலும் உண்மை. இதற்குக் காரணம் அபிராமியின் பெருங்கருனைதான். காலம் அல்லாத, காலத்தில் பழுத்த கற்பகமரம் போன்றவள் இந்தத்தாய்."

இப்படி யெல்லாம் எண்ணிப் பார்க்கிறார் இந்தப் பக்தர். அந்த எண்ணங்களின் சாரமாக வருகின்றன. சொற்கள். .

எனக்கு வம்பே பழுத்த படியே!

படி என்பது உருவம் அல்லது முறை. வம்பே பழுத் தல் என்பது காலம் அல்லாத காலத்தில் பழுப்பதைச் சொல்வது. கொடியென்றும் கொம்பென்றும் விளித்தார். கொம்பு என்பது பூங்கொம்பைக் குறிப்பது. பூ வந்தால் பிறகு காய் வந்து கனி வரவேண்டாமா? அந்தக் கொம்பு இதோ பழுத்துவிட்டது. ஆனால் பல காலம் காத்திருந்து ப்ருவம் வரும்போது பழுக்க வேண்டிய அது விரைவிலே பழுத்துவிட்டது. இது பெரு வியப்பு அல்லவா? இவ்வாறே வம்பெனப்பழுத்த பெருங் கருணையை, மாணிக்க வாசகரும் எண்ணி இன்புறுகிறார். அநுபூதி மான்களுக்கு இறையதுபவம் ஒன்று போலவே இருக்கும்.