பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

தன் குட்டிகளை விட்டு குளிப்பாட்டியது. ஒவ்வொரு குட்டியாக பிடித்து சோப்புத் தேய்த்து தலையில் நீர் ஊற்றி அழகாக குளிப்பாட்டியது. அதன் பிறகு குட்டிகளின் உடலில் மணப்பொடி தூவி சீர்உடை அணிந்து புல் உணவு தந்து பள்ளிக்கு அனுப்பியது.

பள்ளிக்கூடத்திற்குள் நான்கு முயல் குட்டிகளும் நுழைந்த போது கம கம வென்று மணம் கமழ்ந்தது. மற்றகுட்டிகளெல்லாம். ஏதோ காரணம் சொல்லி குளிக்காமல் வந்தன. ஆனால் முயல் குட்டிகள் மட்டும் அண்ணாவியின் பேச்சை மதித்து குளித்து அழகாக வந்திருந்தன. அல்சேசன் அண்ணாவிக்கு அந்த முயல் குட்டிகளை பார்க்கப்பார்க்கப் பெருமையாய் இருந்தது.

அண்ணாவி மற்ற மாணவர்களைப் பார்த்து “டே குட்டிகளா நீங்களும் படிக்க வந்து விட்டீர்களே.இதோ பாருங்கள் இந்த முயல் குட்டிகள் குளித்து எவ்வளவு அழகாக வந்திருக்கின்றன” என்று கேட்டார்.

உடனே குரங்குக் குட்டி ஒன்று எழுந்து நின்றது. “அண்ணாவி ஐயா நீங்கள் ஒரு நாள் முயலம்மா வீட்டுப் பக்கம் போய் வாருங்கள். அப்புறம் சொல்லுங்கள்” என்று சொல்லியது.

அந்தக் குரங்குக் குட்டி ஏன் இப்படிச் சொன்னது என்று அண்ணாவிக்குப் புரியவில்லை.

அன்று மாலை பள்ளிக்கூடம் விட்டதும் அண்ணாவி முயல் குட்டிகளைப் பின் தொடர்ந்து சென்றது.
அ-2