பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52


முயல் இவ்வாறு சொல்லிக் கொண்டு வரும் போதே “ஐயையோ என்னால் முடியாது. அந்தப் பாம்பு கடித்தால் நான் செத்துப் போய் விடுவேன்” என்று குரங்கு ஒலமிட்டது.

“சும்மா பயப்படாதே. நான் சொல்வதைத் தெளிவாகக் கேட்டுக் கொள். உன் உயிருக்கு ஆபத்து வரும்படி நான் சொல்ல மாட்டேன்” என்றது முயல்.

“சரி சொல்லு,” குரங்கு கேட்கத் தயாராய் இருந்தது.

“குரங்கண்ணா, மனிதர்கள் இந்த வெள்ளிக்கிழமையன்று பாம்புக்குப் பால் கொண்டு வருவார்கள். குடம் குடமாகப் பாலைக் குடித்து விட்டு அது படம் விரித்துக் கூத்தாடும். அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் வரிசையாகப் பனைமரங்கள் நிற்கின்றன. அவற்றின் உச்சியில் நுங்குகள் குலை குலையாகக் காய்த்துத் தொங்குகின்றன” என்று முயல் சொல்லிக் கொண்டு வரும் போதே குரங்கு குதித்தது.

“புரிந்து கொண்டு விட்டேன். முயல் குட்டியே நீ மிகுந்த அறிவாளி. இனி நீ கூற வேண்டாம். நாளை நடக்கப் போகிறதை நீ ஈச்சம் புதர் மறைவிலிருந்து பார்த்து மகிழலாம். வெற்றி, வெற்றி” என்று.ஆனந்தக் கூத்தாடியது குரங்கு.

வெள்ளிக்கிழமை வந்தது. வேலூரிலிருந்து பக்தியுள்ள பெண்மணிகள் வெள்ளிக் குடங்களில் பாலை எடுத்துக் கொண்டு காட்டு நாகராசன் கோயிலுக்கு வந்தார்கள். பார்ப்பனர் அந்தக் குடங்களையெல்லாம்