பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
66


அழைத்தது. மன்னவன் காதில் அந்தச் சின்னவன் குரல் எட்டவில்லை. முயல் தன் காலடியில் கிடந்த ஒரு சின்னக் கல்லை எடுத்து அந்தக் கிழட்டுச் சிங்கத் தின் மீது வீசியெறிந்தது. சிறிது புரண்டு படுத்த அந்தச் சிங்கம் சோதிடர் வந்து விட்டாரா?" என்று கூறிக்கொண்டே கண் விழித்தது.

எதிரில் ஒரு முயல் நிற்பதைப் பார்த்ததும் அதற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

"கடவுளின் தூதரே, நலம் தானா? சிவபெருமான் பார்வதி தேவி எல்லாரும் நலம்தானா?"என்று கேட்டது.

முயலுக்கு ஒரு ஐயம் தோன்றியது. இத்த கிழட்டுச் சிங்கம் உண்மையில் அரசர் தானா? இல்லை அரைப் பைத்தியமா என்று நினைத்தது. இருந்தாலும், அது அரசனாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டு அதனுடன் பேசத் தொடங்கியது.

அரசே, என்னைக் கண்டவுடன் தாங்கள் இவ்வளவு மகிழ்ச்சியடையக் காரணம் என்ன? தெரிந்து கொள்ளலாமா?' என்று கேட்டது.

"சிவபெருமான் தூதரே, உங்களைப் பார்த்ததால் என் கவலை எல்லாம் தீர்ந்து விட்டது. இரண்டு நாட் களுக்கு முன் என் இனத்தவர்கள் ஒரு மானிடக் கிழவனை இங்கு பிடித்து வந்தார்கள். அவன் யார் என்று விசாரித்தபோது பட்டணத்து ஆலமரத்தடியில் சோதிடம் சொல்பவன் என்று தெரிந்தது. என்