பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t{}6 அப்பர் தேவார அமுது:

பிறவி வாராது. 'வினைப் போகமே இந்தத் தேகம் கண்டாய்” என்று பட்டினத்தார் சொல்கிருர். *

ஒருவனுடைய மகன் வியாபாரம் செய்யப் புகுந்து அறியா மையில்ை கடன் வாங்கிச் சுமத்திக் கொள்கிருன். கருணை யுடைய தகப்பன் அவனுக்குப் பொருளைத் தந்து, ‘கடனை யெல்லாம் போக்கி விட்டுச் சாமர்த்தியமாக வியாபாரம் செய்து பொருளை ஈட்டு’ என்று சொல்கிருன். அறிவற்ற அந்தப் பிள்ளை தந்தை தந்த பொருளைக் கொண்டு பழைய கடன்களைக் கொடுத்து மீண்டாலும், மறுபடியும் தன் அறியாமையால் புதிய கடன்களை வாங்கி இன்னலடைகிருன், இறைவன் நமக்கு இந்தப் பிறவியை அளித்து, தனு கரண புவன போகங்களை வழங்கி, பழைய வினையைப் போக்கிக்கொண்டு வினையற்றவகை வா என்று அனுப்புகிருன். நாமோ பழைய வினையை அநுபவித்துக் கழித்துக் கொண்டிருக்கும் போதே புதிய வினைகளைச் சேர்த்துக் கொள்கிருேம்; வினைகளை அழிக் காமல் இருக்கிருேம். .

வினை எனும் சரக்குக் கொண்டேன்;

அழித்திலேன்.

பொருளெல்லாம் அழிந்துக் கடனில் மூழ்கித் தத்தளிக்கும் போது, ‘இனி என்ன செய்வது?’ என்று அயர்ந்து நிற். கிருேம், கடன் சுமையினின்றும் நீங்க வழி தெரியாமல் அலமந்து செயலொழிந்து அயர்ந்து வாடுகிருேம்.

அழித்திலேன்; அயர்த்துப் போனேன்;

அதிகை விரட்டனீரே.

திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெரு மானை நோக்கி இப்படி முறையிட்டுக் கொள்கிருள் அப்பர் சுவாமிகள். - .

'எனக்கு அகக்கண் அளித்திருக்கிருய். ஆனால் அந்தக்