பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 அப்பர் தேவார அமுது

அறியாமை தோன்ற அதனால் விழிப்பைப் பெறவில்லை என்றும் கொள்ளலாம். வினை - ஆகாம்யம். வினையை அழித்திலேன் என்று பின்னும் வினையைக் கூட்டிப் பொருள் கொள்க. அயர்ந்து என்பதே அயர்த்து என்று வந்தது; ஒன்றும் செய்ய இயலாமல் ஓய்ந்து போய் நிற்கும் நிலை அது. வீரட்டனிரே: வீரட்டனர் என்பதன் முன்னி லை; ஏ, விளியுருபு.

காமநோய் வராமல் காத்து எதனிடத்தும் பற்று வையா மல் உண்முகக் கண்ணுகிய ஞானத்தைப் பெற்று அறி யாமையைப் போக்கி வினைகளை நீக்கில்ை இறைவன் திருவரு ளால் பேரின்பப் பெருவாழ்வு கிடைக்கும். இங்கே எதிர்மறை யாக உள்ளவற்றை உடன்பாடாக்கில்ை இந்தக் கருத்துத் தோன்றும்.)

நான்காம் திருமுறையில் 26-ஆம் திருப்பதிகத்தில் ஏழாவது திருப்பாட்டாக உள்ளது இது.