பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீறுடை அழகர் 121 களாக இருந்தவர்களும் ஒரே நிலையைப் பெற்று விளக்கம் பெறுவார்கள். நெய்தலும் தாமரையும் ஒரே இடத்தில் மலர்ந்து விளங்கும் காட்சி இதை நினைப்பூட்டுகிறது. சாக் கடையானுலும் யமுனையானுலும் கங்கையிலே சங்கமம் ஆண் பிறகு எல்லாமே கங்கையாகி விடுகின்றன அல்லவா? இறைவ டைய திரு முடியிலுள்ள கங்கைக்கே அத்தகைய சிறப்பு இருக்கும் போது கருணையே வடிவான இறைவரிடத்தில் அந்த இயல்பு இருப்பது ஒரு வியப்பா?

இப்படியெல்லாம் நினைந்து எம்பெருமானுடைய திரு. வருட் சிறப்பை உணர்ந்து உருகும்படி பாடுகிருர், அப்பர் சுவாமிகள். -"

ஆறுடைச் சடையர் போலும்,

அன்பருக்கு அன்பர் போலும், கூறுடை மெய்யர் போலும்,

கோள்அரவு அரையர் போலும், கீறுடை அழகர் போலும்,

நெய்தலே கமழும் நீர்மைச் சேறுடைக் கமல வேலித்

திருச்செம்பொன் பள்ளி யாரே.

  • நெய்தல் மலரே எங்கும் மணம் வீசும் இயல்பையுடைய சேற்றைத் தமக்குப் பிறப்பிடமாகக் கொண்ட தாமரைகளை யுடைய வயல்களையும் குளங்களையும் எல்லையாகப் பெற்ற திருச் செம்பொன் பள்ளியிலே எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் கங்கையாகிய ஆற்றைத் தம் சடாபாரத்தில் கொண்டவர்; மெய்யன்பர்களிடம் தனியான அன்பு காட்டுபவர்; ஒரு கூற்றை உமாதேவிக்கு அளித்து விட்டு மற்ருெரு கூற்றைத் தமக்காகக் கொண்ட திருமேனியை உடையவர்; கொலை செய்யும் தன்மை யையுடைய பாம்பைத் திருவரையில் நாணுகவும் கோவன மாகவும் அணிந்தவர்; திருநீற்றைப் பூசி அதல்ை அழகு மிக்குத் தோன்றும் அழகர்."