பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் இவர்க்கு இயல்போ? 39.

இயல்பு. ஆனால் இந்தக் கணவன் மனைவியரின் இயல்பே வேறாக, பார்த்தால் வேடிக்கையாக, பரிகாசத்துக்கு உரியதாக இருக்கிறது. நல்ல ஆட்டம் !

தேய்பொடி வெள்ளை பூசிஅதன் மேல்ஓர் திங்கள்
திலகம் பதித்த நுதலர்,
காய்கதிர் வேலை நீலஒளி மாமிடற்றர், கரி
காடர், காலொர் கழலர்,
வேயுடன் ஆடு தோளியவள் விம்ம வெய்யமழு
வீசி வேழஉரி போர்த்து
ஏ! இவர் ஆடு மாறும்இவள் காணு மாறும்இது
தான்இவர்க்குஓர் இயல்பே !

  • தேய்ந்த வெள்ளையாகிய பொடியைப் பூசிச்சந்திரனாகிய திலகத்தைத் தம் நெற்றியின் மேலே பதித்திருக்கிறவராய் கடலில் தோன்றிய வெம்மை வீசுசின்ற விடத்தின் நீல ஒளியை உடைய கரிய கழுத்தை உடையவராய், பிணங்கள் கரியாகும் சுடுகாட்டில் வசிப்பவராய், காலில் ஒற்றைக் கழலை உடையவராய், மூங்கிலோடு ஒப்புச் சொல்லும் தோளையுடைய உமாதேவி அஞ்சி விம்மும்படியாகத் தம் மழுவாயுதத்தை வீசி யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்துக் கொண்டு இவர் ஆடும் விதமும் அதை இந்த உமாதேவி காணும் விதமும் ஏ! என்ன பரிகாசத்துக்குரியனவாக உள்ளன. இதுதான் இந்த இருவர்களுக்கும் உரிய இயல்பு போலும்!(அவர் பைத்தியத்தைப் போல ஆடுகிறார் ; இவள் மற்றொரு பைத்தியத்தைப் போல அந்த ஆட்டத்தைக் கண்டு களித்துக் கொண்டு நிற்கிறாள்! )*

[கட்டி தட்டாமல் தேய்ந்ததுபோல இருத்தலின் தேய்பொடி என்றார். பொடி வெள்ளை-வெள்ளைப் பொடி ; முன்பின் மாறி நின்றன. நெற்றியிலே திருநீறு பூசியதை இங்கே குறித்தார் ; பின்னே திலகத்தைச் சொல்வதனால் அவ்வாறு கொள்ள