பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஆலயம் - 73,

சேவடி - காலையும் மாலையும் கைதொழுவார் மனம் ஆலயம் ஆரூர் அரநெறியார்க்கே.

ஆலயத்தில் பிறர் புகுந்து தரிசனம் செய்யும்படி அது திறந்திருந்தாலும், இரவிலும் வேறு சில நேரங்களிலும் அது சாத்தியிருந்தாலும் அந்த ஆலயத்தில் எப்போதும் எழுந் தருளியிருக்கிருர் இறைவர். சில அதிகாரிகள் தம்மைப் பிறர் கானவரும் நேரம் இதுவென்று வரையறை செய்துகொண்டு அந்த நேரத்தில் மட்டும் அலுவலகத்துக்கு வந்து காட்சி கொடுப்பார்கள். அவ்வாறின்றி எந்த நேரத்திலும் தன் அவை: யையே பணி நிலையம் ஆக்கிக்கொண்டு யார் எப்போது வந்: தாலும் குறை நிறைகளைக் கேட்கும் செங்கோல் அரசனைப் போல அரநெறியார் இருக்கிருர். அவர் திருக்கோயில் கொண்டிருக்கும் அரநெறியிலே எல்லாச் சமயங்களிலும் அவ. ரைத் தரிசனம் செய்ய முடியாது. ஆனல் அந்த அரநெறியா ருக்கு மற்ருேர் ஆலயம் இருக்கிறது. அதுதான் காலையும் மாலையும் கை தொழுவார் மனம்’. அந்த ஆலயத்தில் அவர் எப்போதும் காட்சி தருவார். அத்தகைய ஆலயத்தை உடைய வர்கள் அவரைச் சதா கண்டுகொண் டிருப்பார்கள். அந்த மனக் கோயிலே அவருக்கு எல்லாக் கோயில்களிலும் சிறந்த ஆலயம். மனம் என்னும் கருப்பக்கிருகத்தில் இறைவரை நிலைபெறச் செய்த பெருங்கோயில் அடியாருடைய திருமேனி, “நினைப்பவர் மனம் கோயிலாக் கொள்பவன்' என்று பிறிதோ ரிடத்தில் அப்பர் சுவாமிகள் பாடுவார்.

பாலை நகுபனி வெண்மதி பைங்கொன்றை மாலையும் கண்ணியும் ஆவன சேவடி காலையும் மாலையும் கைதொழு வார்மனம் ஆலயம், ஆரூர் அரநெறி யார்க்கே, * திருவாரூர் அரநெறியில் எழுந்தருளியிருக்கும் மகா தேவருக்குப் பாலைப் போன்ற குளிர்ந்த வெண்மையான பிறையும், மஞ்சள் நிறம் பெற்ற கொன்றையும் கண்ணியும்