பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அப்பர் தேவார அமுது

புதையலிலே கிடைத்த பொன்னே வீட்டினுள் பாதுகாத்து வைத்திருப்பவன் காலையில் எழுந்தவுடன் அதைப் பார்ப்பான். பிறகு புறத்தே சென்று தன் தொழிலைக் கவனித்துவிட்டு வீட் டுக்கு வந்து உறங்கச் செல்லும் போதும் அதை ஒரு முறை பார்த்து மகிழ்வான். வெளியில் பணிகளை ஆற்றும் போதும் அவன் அகமனத்தில் அதன் நினைவு இருந்து கொண்டே இருக் கும். கண்ணினல் பார்த்துக் கையில்ை எடுத்து மகிழ்வது காலே யிலும் மாலையிலும் ஆலுைம், அவனுக்கு எப்போதும் அந்த நினைவே இருக்கும்.

மற்ருேர் உதாரணத்தைப் பார்க்கலாம். பெரிய குடும்பத் தில் சுற்றத்தார் பலரோடு ஒரு பெண் வாழ்கிருள். அவளுக்கு எப்போதும் ஏதாவது வேலை இருந்துகொண்டே இருக்கும். தன் கணவனை அவள் இரவிலேதான் சந்திக்க முடியும். அவள் படுக்கப் போகும்போது அவனைக் காதலுடன் விழியால் கண்டு இன்புறுகிருள். அவன் உறங்கிய பிறகே உறங்கு கிருள். விடியற்காலையில் அவன் எழுவதற்கு முன்னே எழுந்து

விடுகிருள்.

பின்துரங்கி முன்எழும் பேதை”

என்று திருவள்ளுவர் சொல்வது போல இருப்பவள் அவள். அப்படி எழும்போது தன் கணவன் முகத்தைக் கண்டு மகிழ்ந்து பின் தன் வேலையைக் கவனிக்க முனைகிருள். .

தன் கணவனை இரவிலே கண்டு இன்புற்று விடியற்காலத் தில் அவன் முகத்தைத் தரிசித்துத் தன் பணிகளைச் செய்யப் புகும் அவளுக்கு இடையிலே எப்போதும் அவனுடைய காட்சி அகமனத்தில் இருந்து கொண்டேஇருக்கும். -

அடியவர்களும் இறைவரை மெய்யில்ை தொழும் நேரம் காலையும் மாலையுமே என்ருலும் அவர்கள் எக்காலத்திலும் அவர் திருவடிகளையே உள்ளத்தே நினைத்துக் கொண்டிரும்

பார்கள். -