பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᎥᏝ$bfᏳ ஆலயம்

நகு : உவம உருபு: பாலின் வெண்ணிறத்தைப் பழித்து அதனினும் வெண்மையாகத் தோற்றும் மதி என்றும் பொருள் கொள்ளலாம். வெண்மதி கண்ணியாகவும், கொன்றை மாலை யாகவும் ஆவன என்று எதிர் நிரல் நிறையாகக் கொள்ள வேண்டும். பசுமை மஞ்சள் நிறத்துக்கும் ஆதலின் பைங் கொன்றை என்ருர், பசும்பொன் என்பது போல.) ; : «

அடியார்கள் அந்தப் பெருமான வணங்குகிருர்கள், அப் பெருமானுடைய செம்மையான திருவடிகளைக் காலையில் எழுந்தவுடன் தொழுகிருர்கள்; த ம க் கு ரி ய பணிகளே யெல்லாம் செய்துவிட்டுப் படுக்கப் போவதற்குமுன் இரவில் அப்பெருமானக் கைதொழுகிருர்கள்.

ஒரு நாளின் இரண்டு எல்லைகள் காலையும் மாலையும்.

இடையிலே எந்தப் பணிகள் ஆற்றினாலும் நாளின் தொடக்க மாகிய காலையிலும் இறுதியாகிய மாலையிலும் ஆரூர் அரநெறி யாரைக் கைதொழுது வாழ்கிருர்கள், அடியார்கள். உள் மனத்தில் இறைவருடைய நினைவு இருந்தால்தான் காலையில் எழுந்தவுடன் அவரை நினைக்க இயலும். அத்தகைய தொண் டர்கள், எத்தொழிலைச் செய்தாலும் அடிமனத்தில் இறை வருடைய நினைவே தங்கி நிற்கும்; தொழிலொழிந்த மாலையில் மேலே மிதந்து வரும். அந்த நினைவோடே உறங்கச் செல்வார்கள். அந்தப் பழக்கத்தால் காலையில் உறக்கம் நீங்கி எழுந்தவுடன் அந்த நினைவு தோன்றும். -

பல பல பணிகளில் ஈடுபட்டு அவற்றில் மனத்தைச் செலுத்தி உலகியலில் அகப்பட்டு உழல்பவர்களுக்கு இவ்வாறு இருத்தல் இயலாத காரியம். இறைவர் சேவடியை மனம் என்னும் கோயிலுக்குள் இருத்தி வைப்பவர்களுக்கு இது சாத்தியம். திருக்கோயிலுக்குள் எழுந்தருளியிருப்பது போல அடியவர்களின் நெஞ்சமாகிய கோயிலுக்குள் இறைவர் நிலை யாக நிற்கிருர், . . . . . . . . . . . . ; ,

பணிகள் ஒழிந்து பிற நினைவின்றி இருக்கும்ப்ேது,அப் பெருமானுடைய காட்சி அகக்கண்ணிலே தோன்றும். -