பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அப்பர் தேவார அமுது

பெரியோர்கள் சொல்கிருர்கள். அந்த நஞ்சத்தைப் போன் றுள்ள என் நெஞ்சத்தை உன்னை அடைந்து சமர்ப்பித்து விட்டால் அதுவும் தன் தீய இயல்பு மாறி நல்லதாகி விடும் என்ற நம்பிக்கை உண்டாயிற்று.”

'அதன் பிறகு என்ன செய்தாய்?

"நஞ்சணி கண்டத்தான் எங்கே இருக்கிருன் என்று ஆராய்ந்தேன். நல்லவர் பலரைக் கேட்டேன். உன் விலாசம் தெரிந்தது. நீ தில்லையிலே எழுந்தருளியிருக்கிருய் என்று அறிந்து கொண்டேன். இந்தத் தலத்துக்குள் நுழையும் போதே இதன் பெருமையை உணர முடிந்தது.”

‘எப்படி?’

'இந்த எல்லைக்குள் அடியெடுத்து வைத்தேன். என் காதில் இனிய வேத கானம் கேட்டது. சிறிது நேரம் நின்று கவனித்தேன். சிறிதளவு போதும் அந்த வேத ஒலி நிற்காமல் முழங்கியது. துன்பத்தாலும் நோயாலும் வருந்துவாருடைய கூக்குரலையும், உண்மையல்லாத பொருள்களைப் பற்றிப் பேசும் ஆரவாரப் பேச்சையும், அகந்தையின் விளைவான பேச்சையுமே கேட்ட என் செவிகளுக்கு அந்த வேத ஒலி நோய்க்கு மருந்துபோல உதவியது. மற்றக் குரல்களையெல் லாம் மறந்து அந்த வேத ஒலியிலே ஈடுபட்டேன். ஆ! இறைவன் சீர் பாடும் இசையல்லவா இது என்றுணர்ந்து மகிழ்ந்தேன். நல்ல இடத்துக்கு வந்துவிட்டோம் என்ற ஆறுதல் பிறந்தது." -

‘அங்கேயே நின்று வேத ஒலியைக் கேட்டுக்கொண்டே இருந்தாயோ?”

'ஊரின் புறத்திலே வந்தபோதே இந்த இனிய கானம் கேட்கிறதே! நம்மை அலைத்துக் குலைத்த திருவாளர் மனத்

தினர் இப்போது தம்முடைய சேஷ்டைகளைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கி இருக்கிருர் போலத் தோன்றுகிறதே!