பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்போதும் உறங்கும் தொண்டர் 9 Ꭵ

கண் திறந்திருந்தாலும் எல்லாக் காலத்திலும் உண்முக நோக்கமுடையவர்களுக்கு உலகமே தெரியாது. அவர்கள் கண் திறந்தவாறே உறங்குபவர்கள். எக்காலத்திலும் அகத் திற் கண் கொண்டு இறைவனை நோக்குபவர்களாதலின் அவர் கள் எப்போதும் உறங்குபவர்களைப் போன்றவர்களே. அவர் களுடைய தூக்கம் தூங்காத தூக்கம்,

எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவோர்க்கு.

இவ்வாறுள்ளவர்களை விழித்துறங்கும் தொண்டர்' என் றும், விழித்த கண்குருடாத் திரி வீரர் என்றும் பெரியவர்கள் சொல்லியிருக்கிருர்கள்.

இரவும் பகலும் உண்முக நாட்டம் கொண்டு, புற உலக நாட்டமற்று விழித்துறங்கும் தொண்டர்களின் மனத்துக் குள்ளே ஒருவர் வந்து புகுவாராம். எல்லாரும் தம்மை மறந்து உறங்கும் வீட்டிலே திருடன் புகுவது போல, புறக் கண் பார்வை தோன்ருமல் இருக்கும் அத்தகைய தொண்டர்களின் உள்ளத்துக்குள்ளே அவர் புகுவார். தம்மையே எண்ணிப் பொருந்தியிருப்பவர்கள் அவர்கள் என்பதை உணர்ந்து அவர் களின் உள்ளத்துக்குள்ளே புகுந்து அதையே தாம் நித்திய வாசம் செய்யும் கோயிலாக ஆக்கிக் கொள்வார்.

ால்லியும் பகலும் எல்லாம்

துஞ்சுவோர்க்கு ஒருவர் வந்து புல்லிய மனத்துக் கோயில்

புக்கனர்.

உண்முக நாட்டம் கொண்ட மெய்ஞ்ஞானியர்கள் தம் உள்ளத்தில் மாசு மறுவில்லாதவர்கள். காமம் முதலிய ஆறு பகைகளுக்கும் அங்கே இடம் இல்லை. வேறு எந்த உணர்வும் இல்லாமையால், இதுதான் யாரும் புகாத இடம், இதுவே நமக்கு ஏற்றது என்று அவர் புகுந்து தங்கிவிடுவார்.

அவர் எத்தகையவர்? அவருடைய தொண்டர்கள் காமத் தைத் துறந்தவர்கள். அவர்களிடம் காமனுடைய ஜபம் பலிக்