உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வளரும் தமிழ்

[111

பயன்பட்டிருத்தல் வேண்டும். இங்ஙனம் பொருள் இழிவுபட்டத னாலேயே இன்று இக்கருத்தை (Scinece)க் குறிக்கத் தமிழ்ச் சொல்லுக்குத் திண்டாடுகிறோம். வட மொழியில்கூட இதற்குச் சரியான சொல் கிடையவே கிடையாது. சாஸ்திரம் என்பது சட்டம் அல்லது விதிகளின் தொகுப்பு என்றே பொருள்படும்.

நூல், நூற்பா என்ற சொற்களிரண்டும் தொடர்புபட்டவை. நூலின் இலக்கணம் கூறும் நன்னூல் இழைத்த நூலின் பண்பையும், மரக்கோட்டம் அறுக்கும் நூலின் பண்பையும் உவமை கூறியுள்ளது. இதிலிருந்தே நூல் என்பது, கணக்கு வானிலை ஆய்வு, இயற்பொருளாய்வு, மொழியினிலக்கணம் முதலிய அறிவுத் துறைகளை மட்டுமே குறிக்கும் என்பது தெரியவரும்.

எனப்

இதற்கேற்ப நூற்பா என்ற சொல்லும் நூலுக்கான 'பா' பொருள்படுகிறது. சிலப்பதிகாரப் பாக்களும் பத்துப்பாட்டுப் பாக்களும் பாக்கள் மட்டுமே; நூற்பாக்கள் அல்ல. இதிலிருந்தே சிலப்பதிகாரமும் பத்துப்பாட்டும் நூல்கள் அல்ல, இலக்கிய ஏடுகள் மட்டுமே என்று காணலாம்.

நூல் (Science) கிட்டத்தட்ட இறந்துவிட்ட காலத்தில் தோன்றிய வடமொழி நாகரிகம் நூற்பாவைச் சூத்திரம் என வழங்கிற்று. இச்சொல் (ஸூத்ரம்) உண்மையில் நூல் என்பதன் மொழிபெயர்ப்பு. நூலின் பண்பு இழக்கப்பட்ட காலத்தவர் அதன் பா வடிவத்துக்கு மட்டும் இதனைப் பயன் படுத்தினர். வடமொழியில் சூத்திரம் என்பது ஒரு பாவகை, ஒரு நடைவகை, ஆனால், தமிழில் அது ஒரு தனி வகைப்பட்ட துறைக்கான செய்யுள் வகை, வடமொழி முறைப்படி திருக்குறளின் குறட்பாக்களைச் சூத்திரம் என்னலாம். ஆனால், தமிழில் அது சூத்திரமும் அல்ல, நூற்பாவும் அல்ல. குறட்பாவே.

மக்களுக்கு இலக்கியம், ஆராய்ச்சியாளர்க்கு நூல். நூலாராய்ச்சிக்கும் அப்பால் சென்று அனுபவ மெய்ம்மை கண்டவர்கள் அறிவுமறை, மறை என்பது நூன்முடிபு, மெய்யுணர்வு (Philosophy, Mysticism) ஆகியவற்றைக் குறிக்கும்.

சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்ட, ஒரு வேளை, தொல்காப்பியத் துக்கும் முற்பட்ட காலத்திலிருந்தே