இரு கடற்கால்கள்
307
அதனால் கடற்கால் திட்டத்துக்கு ஓர் அரிய நலன் ஏற்பட்டது. லெப்பேரின் அளவை யாராய்ச்சியின்போது, நீர் மட்ட வேறுபாடு பற்றிய அவர் முடிவை லாப்லேன்ஸும் புரியரும் மறுத்திருந்தனர். ஆனால் 1846-47இல் தூயதிரு சைமன் சங்கத்தைச் சார்ந்த பேராசிரியர் 'அன்பாந்தின்' நிறுவிய ஆராய்ச்சிக்கழகம் (Societe ‘d'etudes) இதனை ஆய்ந்து கணித்தது. அச்சம் முற்றிலும் ஆதாரமற்றது என்று அக்கழகம் முடிவு செய்து விட்டது.
தமிழக ஓருலகக் கனவைத் தாயாகவும், தமிழகம் பற்றிய உலகக் கனவைத் தந்தையாகவும் கொண்டு மேலையறிஞர் கனவுக் கருவில் உருவாகிவந்த உடற்கால் திட்டம், இவ்வாறு பிரிட்டனின் தொலைநோக்கற்ற குறுகிய ஆதிக்க எண்ணத்தால் கருவிலே பலபலவகைத் தொல்லைகளுக்கு இலக்காயிற்று. திட்ட முதல்வராகிய பெர்டினாண்ட்டி லெஸப்ஸ் அதற்கு ஓர் ஒப்பற்ற ருத்துவராய் அமைந்தனாலேயே,அதன் நிறைவேற்றப்பேறு எளிதாகி ஒருலக அன்னையின் மடியில் அது தவழ இடமேற்பட்டுள்ளது என்னலாம்.