உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




326

L

அப்பாத்துரையம் - 10

17ஆம் தேதி காலை 11 மணிக்குக் குண்டுகள் முழங்கின. தத்தம் கொடிகளை வானளாவப் பறக்கவிட்டவண்ணம் போர்க் கப்பல்கள் புறப்பட்டன. அவற்றின் நடுநாயகமாகக் கழுகுக் கொடியுடன் ‘கழுகுக்கலம்' அல்லது ‘லேகிள்' என்ற பெயர் தாங்கிய பிரஞ்சுக் கொடிக் கப்பல் வீறுடன் முன்சென்றது. அதன் தளத்தின் மீது பிரஞ்சுப் பேரரசி யூஜினும், எகிப்திய பாஷா இஸ்மாயிலும் பெருமிதத்துடன் வீற்றிருந்து இரு திசை மக்களின் ஆரவார வாழ்த்துக்களுக்கு எதிர்வாழ்த்தும் வணக்கமும் செய்தவாறு சென்றனர். பேரரசர் பிரான்சு ஜோசப், பிரஷ்ய இளவரசர் பிரடெரிக் வில்லியம், ஹனோவர் இளவரசர் ஜார்ஜ், இளவரசர் அப்துல்காதர் ஆகியோரும் இந்த விழாவணியில் கலந்து கொண்டிருந்தனர். பிரஞ்சுக் கப்பலின் தலைமையில், அதன் பின்னே வரிசை வரிசையாக 11 நாடுகளுக் குரிய 67 கப்பல்கள் அணிவகுத்து சயீத் துறைமுகத்திலிருந்து புதிய கடற்கால் வழியாக ஊர்வலமாகச் சென்றன.

கடற்காலின் இருமருங்கிலும் பகலில் வண்ணக்கொடி வரிசைகளும் இரவில் வண்ண ஒளி விளக்க வரிசைகளும் ஊர்வலக் காட்சியைக் கண்கொள்ளாக் காட்சியாக்கின. இரு பாரிசங்களிலும் ஆடல் பாடல் கேளிக்கைகள், வேடிக்கைகள், இன்னிசை யரங்குகள் நடைபெற்ற வண்ணமிருந்தன. இவ்வாறு விழாக் கோலத்தில் முதல் நாற்பது கல்தொலை செல்வதற்கே 12 மணிநேரம் பிடித்தது.

வாண

இரவு நேர முழுவதும் விழாக்குழுவினர் இஸ்மாயிலியா நகரில் விழாவினுள் தனி விழா நடத்தினர். அடுத்த நாளும் அந்நகரிலேயே அனைவரும் இளைப்பாறியிருந்து 19ஆம் தேதி மீட்டும் பயணம் தொடங்கினர். மறு நாளிலேயே ஊர்வலம் சூயஸ் துறைமுகம் சென்று செங்கடலில் செஞ்சீருடன் விழா முற்றுப்பெறு வித்தது.

நாற்றிசையும் புகழ் பரப்பிய உலகின் முதல் ஓருலக விழா இவ்வாறு நான்கு நாள், நான்கிரவில் முழு நிறைவுற்றது.

திறக்கப்பட்ட கடற்கால் வழியாக மறு நாளிலிருந்தே உலகக் கப்பல்கள் மேலையுலகிலிருந்து நேரே கீழை உலகுக்கும், கீழை உலகிலிருந்து நேரே மேலையுலகுக்கும் சென்று தொடர் உண்டு பண்ணத் தொடங்கின.