உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

327

இடர்களும் இன்னல்களும் பல கடந்து வெற்றி பெற்ற லெஸெப்ஸைப் பாராட்டி இப்போது உலகெங்குமிருந்து ஆயிரக் கணக்கான மகிழ்ச்சிக் கடிதங்கள் வந்து குவிந்தன. அவர் புகழ் திக்கெங்கும் பரவிற்று. பிரெஞ்சு அரசியலார் அவருக்குக் கோமான் (Count) என்ற பட்டம் தந்து அவரை நன்கு மதித்தனர். பிரிட்டன் கூட அவர் புகழ்மீது புகழ் முடிசூட்டத் தயங்கவில்லை. வெளிநாட்டமைச்சர் கிளாரண்டன் அவரை வாயாரப் புகழ்ந்து முடங்கல் தீட்டினார். இலண்டன் மாநகரம் அவருக்குத்தன் கௌரவக் குடியுரிமையளித்துத் தன் பெருமையை நாட்டிற்று. விக்டோரியா அரசியார் அவரைத் தம் ‘பளிங்கு மாடத்தில்' வரவேற்றுப் பட்டங்கள் வழங்கினார்.

குமுறலிடையே தொடங்கிய திட்ட வாழ்வு இவ்வாறு புகழ் குலாவிற்று. ஆனால் இக்கட்டுகள், இடர்ப்பாடுகள் இன்னும் நீங்கவில்லை. அவை உருமாறிப் பின்னும் சில காலம் உறுமின.

  • * *

சயீத் துறைமுகம் இப்போது கப்பல் தங்கும் துறைகள், ஏற்ற இறக்கப்பொறிகள், செப்பவேலைக்குரிய பட்டறைகள், மின் ஒளி விளக்கு வாய்ப்புகள் ஆகிய தற்கால வசதிகள் நிரம்பிய துறைமுக நகரம் ஆகியுள்ளது. உயரிய ஒரு கலங்கரை விளக்கம் கப்பல்களுக்கு வழிகாட்டுகிறது. துறைமுகத்தில் 2070 கெஜம், 2730 கெஜம் நீளமுள்ள இரண்டு அலைதாங்கிகள் கட்டப்பட்டுள்ளன. சூயஸ் கடற்கால்

சிறிய கைப்பேரி

டுவித்துறைமுகம்

பெரிய கைப்பேர்

திழாஷ்ஏரி

இஸ்மாயிலியா' சுகரம்

றைமுகம்

நன்னீர்க் கால்வாய்

இருப்புப்பாதை

சயீத் துறைமுகத்திலிருந்து கடற்காலில் பயணம் செய்பவர் மிகுதி ஆழமில்லாத மென்ஸாலா ஏரி வழியாக 24 கல் செல்வர். இத்தொலை முழுதும் கடற்காலில் ஏரி நீர் கலக்காமல் அது