உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

371

கடற்காலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் நில இடுக்கில் மிக நெருங்கிய பகுதி வட அமெரிக்காவிலிருந்து அதனூடாகத் தென் அமெரிக்கா செல்லும் ஊடு நெடுந்தொடர் (The Great Divide) என்ற மலைக்கோடும் இங்கேயே மிகவும் உயரம் குறைந்ததா யுள்ளது. ஆயினும் கடல் மட்டத்திலிருந்து 320 அடி உயரமுள்ள அதன் 'பிடரி'யை 270 அடி அளவாக வெட்டிக் குறைத்த பின்னரே கடற்காலின் அடித்தளத்துடன் அது இணைய முடிந்தது.

கடற்காலின் மொத்த நீளம் ஆழ்கடலிலிருந்து ஆழ்கடல் வரை 50 கல் ஆகும். அதன் நடுப்பெரும் பகுதி கேதன் ஏரி (Gatun Lake) என்ற நீர்த்தேக்கத்தினூடாகச் செல்கிறது. இது கடல் மட்டத்துக்கு மேல் 85 அடி உயரமுடையது. மொத்தம் 32 கல் தொலை நீளமுடையது. கடற்காலின் உச்ச உயர் மட்டம் இதுவே.

"

அட்லான்டிக் மாகடலின் திசையில் கேதன் ஏரியின் கோடியில் கேதன் பூட்டுக்கள் என்ற அமைப்பு வகுக்கப்பட்டுள்ளது. இது மூன்று படிகளுள்ள ஒரு பெரிய ‘நீரோணியாக, இவ்வுயர் மட்டத்திலிருந்து கடல் மட்டத்துக்கும், கடல் மட்டத்திலிருந்து உயர் மட்டத்துக்கும் கப்பல்களை ஏற்றவும் இறக்கவும் உதவுகிறது.இது கடந்து கடற்கால் 7 கல் கடல் மட்டத்திலேயே ஓடி, அட்லான்டிக் மாகடல் முகப்பில் கிரிஸ்டோபல் துறைமுகத்தில் சென்று முடிகிறது.

பசிபிக் மாகடலின் திசையில் கேதன் ஏரி கடந்த பகுதி 'மிராப்ளோர்ஸ்' ஏரி என்ற நீர்த் தேக்கத்தினூடு செல்கிறது. இது 3 கல் நீளமுடையது. இதன் மட்டம் கேதன் ஏரியைவிட 31 அடி தாழ்ந்தது. ஆனால் கடல் மட்டத்தைவிட54 அடி உயரமுடையது கேதன் ஏரிக்கும் இதற்கும் இடையேயுள்ள 'பெட்ரோ மிகுவெல் ‘பூட்டு ஒருபடியுள்ள ஓர் ஏணியாகக் கப்பல்களை 31 அடி ஏற்றி இறக்கி இம்மட்டத்துக்குக் கொண்டு வருகிறது. இது கழிந்தபின் மிராப்ளோர்ப் பூட்டுக்கள் என்ற அமைப்பு இரண்டு படிகளுள்ள ஏணியாகக் கப்பல்களை 54 அடி ஏற்றி இறக்கி, மீண்டும் கடல் மட்டத்தில் கொண்டு விடுகிறது. கடற்கால் 7 கல் கடல் மட்டத்தில் சென்றபின் பசிபிக் மாகடல் முகப்பில் பல்பாவோத் துறைமுகத்தில் சென்று முடிகிறது