உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




372) ||-

அப்பாத்துரையம் - 10

டு நெடுந் தொடரை வெட்டிக் குறைத்துப் பெருமுயற்சி யுடன் அமைக்கப்பட்ட கடற்காற் பகுதி பெரும் பிளவு (the Cut) என்றே குறிக்கப்படுகிறது. கட்டுமான காலத்தில் இது ‘குலெப்ரா’ப் பிளவு என்று வழங்கப்பட்டது. அப்பகுதியின் அரும்பணியை வெற்றிகரமாக முடித்த பொறிவலாளர் பெயரால் அது இன்று 'கால்லியர்டுப் பிளபு' (Galliard Cut) என்று பெயர் பெற்றுள்ளது. கேதன் ஏரிப் பகுதியில் பசிபிக் மகாகடல் திசையிலுள்ள முதல் 10 கல் தொலை இதுவே.

கால்லியர்டுப் பிளபு கழிந்தவுடன் ‘சாக்ரிஸ்' என்ற ஓர் ஆறு கடற்காலில் வந்து விழுகிறது. கேதன் ஏரித் தேக்கத்துக்கு மூலகாரணமான நீராதாரம் இதுவே.இந்த ஆறு கால்வாயை விட்டுப் பிரிந்த பின் சிறிது தொலைவில் கேதன் அணை என்ற ஒரு பெரிய அணை கட்டப்பட்டுள்ளது. தேக்கத்துக்கு மூலகாரணமான கடற்காலின் அமைப்புஇது. நீர் பரந்து பெருகித் தேக்கம் பெரிதாகுமுன் இப்பகுதியிலிருந்த குன்றுகளெல்லாம் இப்போது தேக்கத்தின் பெரும் பரப்பில் இடையிடையே சிறிய பெரிய தீவுகள் ஆகியுள்ளன. அத்தீவுகளில் மிகப் பெரியது ‘பாரோ கொலராடோ' என்பது.

கடற்கால் திட்டம் முடிவுற்று 16 ஆண்டுகள் சென்றபின், இந்நீர்த் தேக்கத்தின் நீர்வளத்தைப்பின்னும் பெருக்க ஒரு புது அமைப்பு உருவாயிற்று. இதுவே 'மாடன் அணை’, இது சாக்ரிஸ் ஆறு கடற்காலுடன் சேருமிடத்துக்கு முற்பட்டுச் சிறிது தொலைவில் கட்டியமைக்கப்பட்டது. இது கடற்காலின் ஆட்சிப் பகுதிக்கு வெளியே பனாமாக் குடியரசின் எல்லைக்குள் இருக்கிறது.

திட்டக்காலத்தில் கேதன் ஏரியும் கேதன் அணையுமே மனித உலகு கண்ட மிகப் பெரிய செயற்கை ஏரியாகவும், அணைக்கட்டு மானமாகவும் விளங்கின. இன்றும் அவை உலகில் இரண்டாம் இடம் வகிக்கின்றன.

கடற்கால்களும் பூட்டமைப்புடைய கால்வாய்களும் இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பே உலகில் பல ஏற்பட்டிருந்தன. ஆனால் அவற்றின் அனுபவமோ, அவற்றில் பயன்படுத்தப்பட்ட சாதனங்களோ பனாமா வகைக்கு முற்றிலும் பயன்படவில்லை.