உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(382)

||

அப்பாத்துரையம் – 10

பொதுவாக ஓர் ஆண்டுக்கு இவ்வாறு 4,850 கோடி குழியடி நீர் செலவாகிறது. ஏரிப் பரப்பில் ஆவியாகவும் பேரளவில் நீர்வற்றுகிறது. இவற்றுக் கெதிராக நீரின் சேம வளம் பெருக்க உதவும் முறையில் திட்ட வேலைக்குப் பின்னர் 1930ஆம் ஆண்டுக்குப் பின் மாடன் அணை கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறும் வளம் பூட்டுக்களுக்கு மட்டுமன்றி மற்றும் பல்வேறு வகைகளுக்கும் பயன்படுகிறது. நீர்மின்சார மாக்கப்பட்டு அது பல நகரங்கள், குடியிருப்புக்களுக்கு ஒளி வசதி, தொழில்களுக்கும் இயந்திரங்களுக்கும் ஆற்றல் வசதி அளிக்கிறது. அதுவே நேரடியாக நீர் வசதியும் தருகிறது.

பூட்டுக்கள் ஒவ்வொன்றும் குத்தாயமாக ஒரு கல் நீளமுடையது. மிராப்ளோர்ஸூம் கேதனும் ஒரு கல்லுக்கு மேற்பட்ட நீளமும் பெட்ரோமிகுவெல் ஒரு கல்லுக்குக் குறைந்த நீளமும் உடையவை. பூட்டின் படி ஒவ்வொன்றும் ஒரு பெரிய பேழையாகச் சமைந்துள்ளது.ஆனால் இரு திசையிலிருந்தும் ஒரே சமயம் கப்பல்களை ஏற்ற இறக்க உதவும் முறையில் கடற்காலின் இரு அருகுகளிலும் ரண்டிரண்டாகப் பேழைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேழையிலும் இயங்கும் பகுதி 1000 அடி நீளமும், 110 அடி அகலமும் உடையது.

பெட்ரோ மிகுவெல் பூட்டுக்களில் கப்பல் செல்லுதல்