உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

383

கப்பல் பூட்டை அணுகும்போது, இணைபேழைகளில் எப்பக்கப் பேழை வழி செல்லவேண்டுமென்று வழிகாட்டிக்குத் தெரிவிப்பதாக, நீரிலேயே அம்பு வடிவான ஓர் ஒளிக்கோடு தோன்றுகிறது. இந்த ஒளிக்கோட்டையும், பூட்டின் பிறவேலை களையும் இயக்கம் பணிமனை ஒருகல் தொலைவில் உள்ளது. பூட்டின் நடுச்சுவர் மீதமைந்த இந்த இரண்டடுக்குக் கட்டடத்தில் பூட்டின முழுப் படிவமும், அதன் இயந்திரங்களும் மிகச் சிறிய அளவில் அமைக்கப்பட்டுள்ளன. இச்சிறு படிவத்தை யக்கினால் பூட்டு முழுவதும் பூட்டு முழுவதும் இயங்கும்படி அவை இணைக்கப்பட்டுள்ளன. மிராப்ளோர்ஸ் பூட்டமைப்பில் சிற்றுருப் படிவமே 60 அடி நீளமுடையது.

ச்

பேழையின் இருதிசையிலும் வாயிற்கதவுகள் இரண்டு அலகுகளாக இணைந்துள்ளன. இருபக்கமும் காரைக் கட்டுக்குள் அமைந்த புழையினுள் நழுவி உட்செல்லும படியும், வெளிவரும் படியும் அவை அமைக்கப்பட்டுள்ளன. அலகுகள் உட்செல்ல, வாயில்திறக்கும். வெளிவந்து இணைய அது மூடும். அலகுகள் கண்ணறை கண்ணறைகளாக அமைந்திருப்பதால், இருபுறக் கொளுவிகளில் பளுத் தாக்காமல் நீரில் மிதந்து நிற்கும்படியே உருவாக்கப்பட்டுள்ளன. பொதுவாக அலகுகள் 7 அடி நீட்டமும் 47 அடி உயரமும் 390 பார (டன்) எடையும் உடையவை. ஆனால் பசிபிக் மா கடலில் வேலி ஏற்ற இறக்க மட்டம் பேரளவில் வேறுபடுவதால் அக்கோடியிலுள்ள அலகுகள் மட்டும் 82 அடி உயரமும் 730 பார எடையும் உடையன. பூட்டுக்களில் நீர் உயர்வதாக யாருக்கும் தென்படாது.

கப்பல் அசைவதாகவே ஒரு சிறிதும் தெரிவதில்லை. அவ்வளவு அமைதி

யுடன் ஏற்றஇறக்கம் நடை

பெறுகிறது. மட்ட ஏற்றத் துக்குக் கேற்ப நீர் கேதன் ஏரிமட்டத் திலிருந்து பூட்டுப் பேழைகளுக்கு வருகிறது அல்லது பூட்டுப் பேழை களிலிருந்து கீழ்மட்டங்கள் வழி கடலுக்குச் செல்கிறது. ஏற்றத்தின்

போது நீர் பூட்டின பக்க மதில்களிலும் ஊடு மதில்களிலும் புதைக்கப்பட்ட பெருங்குழாய்கள் வழியாகச் சென்று, பக்க