தென்னாடு 81
கிழக்குக் கங்கர்
கிழக்குக் கங்க மரபினர் இதன்பின் சிற்றரசராகவே இருந்தனர் என்று கருதவேண்டும். ஆனால், ஏழாவது அரசனான மூன்றாம் காமர்ணவன் (877-897) தன் ஆட்சித் தொடக்கத்திலிருந்து கலிங்க கங்க ஊழி ஒன்று தொடங்கினான். இதனால் வடபகுதியிலேனும் அவன் தன்னாண்மையுடைய வனாயிருந்தான் என்று எண்ண இடமுண்டு.
தேவேந்திர வர்மன் அல்லது முதலாம் இராசராசன் 1070ல் அரசுகட்டில் ஏறினான். அவன் குலோத்துங்க சோழன் புதல்வி இராசசுந்தரியை மணந்துகொண்டான். இது முதல் கீழைக்கங்க மரபு சோடகங்க மரபு என்று அழைக்கப்பெறுகிறது. முதல் சோடகங்கனாகிய அனந்தவர்மன் சோடகங்கன் 1078 முதல் 1152 வரை 74 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
சோடகங்கர் கலிங்கத்தின் வடபகுதியாகிய ஒரிசாவையும் வென்று ஆண்டனர். இவர்கள் தமிழகத்தில் சோழருடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள். தமிழுக்கும் தமிழ்ப்புலவர்களுக்கும் அவர்கள் பேராதரவு செய்தனர் என்பதை அவர்கள் கல்வெட்டுக்கள் காட்டுகின்றன.
இம்மரபினர் 1434 வரை ஆண்டனர். அதன்பின் ஆயர் குடியினனான கபிலேந்திரனால் கஜபதி மரபு என்ற புது மரபு நிறுவப்பட்டது.
சமயம், மொழி, கலை, பண்பாடுகள்
தென்னாட்டின் அரசர் பேரரசர் மரபுகளுள் பெரும்பாலானவை இக்கால முழுதும் சமணசமயம் தழுவியவையாய் இருந்தன என்பது கவனிக்கத்தக்கது. பிற்காலப் பல்லவரும், பிற்கால பாண்டியர் சிற்றரசராயிருந்த சோழரும், சோடகங்கரும் மட்டுமே சைவ-அல்லது வைணவ சமயம் தழுவியவராயிருந்தனர். கன்னட நாட்டில் களசூரி மரபின் தோற்றம் வீரசைவ சமயத்தின் பிறப்பாகவே அமைந்தது.
மொழித்துறையில் தமிழ் நீங்கலாகத் தென் இந்திய மொழிகள் எவற்றுக்கும் இவ்விடைக்காலத்தில்கூட இலக்கிய வாழ்வு ஏற்படவில்லை. கன்னடத்தில் கி.பி. 4ஆம் நூற்றாண்டி-