உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 அப்பாத்துரையம் - 11

-லேயே இலக்கியம் இருந்ததென்பதற்கான சான்றுகள் தமிழ் நூல்களின் மூலமே கிடைக்கின்றன. ஆனால், இன்று நமக்கு 9ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட இலக்கியமே கிட்டுகின்றது. தெலுங்கிலுள்ள பழைய கல்வெட்டுக்கள் 7-8ஆம் நூற்றாண்டுக்குரியவை. அவற்றால் அது அன்றே இலக்கிய வளம் உடையதாயி ருந்ததாய் அறிகிறோம். ஆனால், நமக்கு 12ஆம் நூற்றாண்டு முதலே தெலுங்கில் இலக்கியம் கிட்டியுள்ளது.


இலக்கியம்

மலையாளத்தில் 12ஆம் நூற்றாண்டு முதலே நமக்கு இலக்கியம் கிடைத்துள்ளது. கன்னட நாட்டில் இக்கால இறுதியிலும், மலையாள, தெலுங்கு, நாடுகளில் இது கடந்துமே இலக்கியம் நமக்குக் கிட்டுகின்றது.

கடைச்சங்க காலத்திலிருந்தே ஆந்திரர், பல்லவர் இலக்கியம் வளர்த்ததாக அறிகிறோம். ஆந்திரர் புத்த சமயத்தினராதலால் பாளி இலக்கியமே பெரிதும் ஆதரவு பெற்றது. அதுவும் நமக்கு இன்று கிட்டவில்லை. சாளுக்கியர், இராஷ்டிரகூடர், மேலைக்கங்கர் ஆகியவர் சமணராதலால், பிராகிருத இலக்கியம் பெருக்கினர். சமணசமயம் கன்னட நாட்டில் தொடக்க கால இலக்கியத்தையும் தமிழகத்தில் சங்க காலத்துக்குப் பிற்பட்ட இலக்கியத்தையும் பெரிதும் ஊக்கிற்று.

சங்க காலத்துக்குப் பின் தமிழகத்தில் புத்த, சமண சமயங்களின் தூண்டுதலாலும், இவற்றை எதிர்த்து மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே எழுந்த சைவ, வைணவ பக்தி ஞான இயக்கங்களாலும் புத்திலக்கியம் பெருகிற்று. பழைய சங்க இலக்கியப் பண்பும் உயர்கலைப் பண்பும் மரபற்று நலிந்தன வாயினும், பல புதுப் பண்புகள் தோன்றின.


சமயம்

பாண்டிய பல்லவப் பேரரசுகளின் ஊழியில் தென்னாட்டின் பண்டை நாகரிகவாழ்வில் பெருத்த மாறுதல்கள் ஏற்பட்டன. அதன் தொடக்கத்தில் எங்கும் புத்த சமண சமயங்களே பரவி மேம்பட்டிருந்தன. பாண்டியர், பல்லவர், சாளுக்கியர், ஆகிய அனைவரும் சமணராகவே இருந்தனர். சங்க