100 அப்பாத்துரையம் 11
வாகீசரட்சிதன் என்ற சோணாட்டுப் புலவன் பெயர் குறிக்கப்பட்டுள்ளன. இப்புலவன் ஆசிரியன் சாக்கியரட்சிதன் ஒரிசாவில் இருந்ததாகவும் குறிக்கப்பட்டுள்ளது.
பிற்காலச் சோழர்
குலோத்துங்கன் காலத்துக்குப்பின் விக்கிரமசோழன் (1118- 1135), இரண்டாம் குலோத்துங்கன் (1133-1150) இரண்டாம் இராசராசன் (1156-1163), இரண்டாம் இராசாதிராசன் (1163-1178), மூன்றாம் குலோத்துங்கன் (1178-1216) ஆகிய ஐந்து சோழர் ஆண்டனர். இரண்டாம் இராசாதிராசன் காலம்வரை பேரரசின் தலைநகரும் எல்லையும் மாறாமலே இருந்தது. அதன்பின் வெளித்தோற்றத்தில் மட்டுமே பேரரசு நிலைபெற்றது. மைசூரில் ஆண்ட ஹொய்சளர், நெல்லூரில் ஆண்ட தெலுங்கு சோடர், தொண்டை மண்டலத்தில் வலிமைபெற்ற கோப்பெருஞ்சிங்கர் என்ற பல்லவச் சிறுகுடி மன்னர், பாண்டியர் ஆகியோர் மேலோங்கினர். பாண்டியர் விரைவில் மீண்டும் பேரரசாற்றல் பெற்று முன்னேறினர். உலகாண்ட சோழப் பேரரசையே அவர்கள் விழுங்கினர்.
சோழர் - பாண்டியர் போர்
உலகாண்ட சோழப்பேரரசு பாண்டிநாட்டை மட்டும் நீண்டகாலம் தன் கீழ் அடக்கி வைத்திருக்க முடியவில்லை. சோழப்பேரரசு விந்தியம் தாண்டி நிலையாக வளராததற்குப் பாண்டியரே தலைக்காரணமாவர். பாண்டியருக்கு இவ்வகையில் சேரரும் இலங்கை அரசரும் எப்போதும் உதவியாயிருந்தனர். இலங்கை அந்நாட்களிலெல்லாம் தென்னாட்டுக்கு அயல் நாடாய் இல்லை. தென்னாட்டின் பகுதியான தமிழகத்தின் கடல்கடந்த ஒரு கூறாகவே இயங்கிற்று.
முதலாம் பராந்தக சோழன் காலத்துக்குப்பின் வீரபாண்டியன் வலிமையுடன் ஆண்டான். சுந்தரசோழ இரண்டாம் பராந்தகன் காலத்தில் அவன் மகன் ஆதித்தனும், கங்க அரசனும் சேர்ந்து பாண்டியனை முறியடித்தனர். ஆனால், பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குள் அவன் மீண்டும் வலிமையுடையவனாய் சோழாந்தகன் என்ற பட்டம் ஏற்றான். சுந்தர