உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 101

பாண்டியன் என்ற மற்றொரு பாண்டியனும் இப்போது ஆட்சி செய்தான்.

இராசராசன் காலத்தில் மீண்டும் பாண்டியர் அரசிழந்தனர். சிலகாலம் பாண்டியரே சோழர் கீழிருந்து ஆண்டனர். சிலகாலம் சோழ மன்னர் புதல்வர் சோழ பாண்டியர் என்ற பெயருடன் நேரடி ஆட்சி செய்தனர். சோழ அரசர் பாண்டியருடன் மணஉறவு கொண்டனர் என்பதைச் சோழ அரசியரின் பெயர்கள் காட்டுகின்றன. சோழாந்தகன் (சோழர்களுக்கு அந்தகன் அல்லது கூற்றுவன்) என்ற பட்டத்துக்கு எதிராக, மதுராந்தகன் என்ற பெயரைச் சோழர் சிலர் கொண்டனர்.

ஐந்து பாண்டியர் என்ற பெயரை நாம் குலோத்துங்கன் காலத்தில் முதல் முதலாகக் கேட்கிறோம். அரசர் குடியில் மூத்தவர்களாக ஒரு சமயத்தில் ஐவர் அரசர் பட்டத்துடன் ஆளும் வழக்கம் பாண்டிய நாட்டில் இக்கால முதல் இருந்ததென்று அறியலாம். இது சோழர் மரபுவரிசையைவிடப் பாண்டியர் மரபு வரிசையைச் சிக்கலாக்குகிறது.

சோழப்பேரரசன் ஆட்சி இறுதியில் இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியவர்கள் ஆட்சியில் எழுந்த பாண்டியர் அரசுரிமைப் போராட்டமே சோழப்பேரரசின் வீழ்ச்சிக்கும், பாண்டியப்பேரரசின் தோற்றத்துக்கும் காரணமாய் அமைந்தது.

இப்போரின் முதல் கட்டம் (1169-1177) இரண்டாம் இராசாதிராசன் ஆட்சியில் மூன்றாம் குலோத்துங்கன் இளவரசனாகப் பட்டத்துக்கு வருமுன் முடிவடைகிறது.

அரசுரிமைக்குப் போராடிய பாண்டியர்கள் பராக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன் ஆகிய இருவர். இவர்களினால் குலசேகர பாண்டியன் திருநெல்வேலியைத் தலைநகராகக் கொண்டு 1132 முதல் 1169 வரை பாண்டிய நாட்டை ஆண்ட மாறவர்மன் சீவல்லவன் புதல்வன். சீவல்லவன் காலத்திலேயே பாண்டியர் திருவாங்கூரையும் கீழடக்கி யாண்டனர். பராக்கிரம பராக்கிரம பாண்டியன் தம் மரபினரின் பழம்பதியாகிய மதுரையையும் கைக்கொள்ள விரும்பினான். ஆகவே அவன் பராக்கிரமனைத் தாக்கி மதுரையை முற்றுகை