102 || — — — அப்பாத்துரையம் – 11
-யிட்டான். பராக்கிரமன் இலங்கை அரசன் உதவியை நாடினான். இலங்கையரசன் இலங்காபுரன் என்ற படைத்தலைவனை பெரும்படையுடன் அனுப்பினான். ஆனால், இலங்கைப் படைத்தலைவன் வந்து சேருமுன் குலசேகரன் மதுரையைக் கைப்பற்றிப் பராக்கிரமனையும் அவன் மனைவி மக்களையும் கொன்றுவிட்டான். ஆயினும் தப்பியோடிய சிறுவன் வீரபாண்டியனை இலங்காபுரன் அரசனாக்க முனைந்தான். இதில் அவன் வெற்றியும் கண்டான். ஆனால், இலங்கைப் படையின் அட்டூழியங்கள் மக்களுக்குப் பிடிக்கவில்லை. அத்துடன் குலசேகரனும் சோழரிடம் உதவிகோரினான். சோழர் படைத்தலைவனான அண்ணன் பல்லவராயன் இலங்கைப் படைகளைத் தோற்கடித்து, குலசேகரனுக்கு முடிசூட்டினான். இலங்காபுரனின் தலையும் பிற படைத்தலைவர் தலைகளும் மதுரைக் கோட்டை வாயிலில் தொடங்கவிடப்பட்டன.
அண்ணன் பல்லவராயன் இப்போது இலங்கை மீது படையெடுக்கத் தொடங்கினான். இலங்கையரசன் இச்சமயம் தன் அரசியல் சூழ்ச்சியால் குலசேகரனை ஏற்று அவனை நண்பனாக்கினான். சோழர் சமயத்துக்கேற்றபடி தாமும் மாறி, வீரபாண்டியனை அரசனாக ஏற்று, குலசேகரனைத் துரத்தினர்.
வீரபாண்டியனும் இலங்கை அரசன் சூழ்ச்சிக்குள்ளாகவே, சோழர் அவனையும் வீழ்த்தி 1190-ல் விக்கிரமன் என்பவனைப் பாண்டிய மன்னனாக்கினார். இவனே பிற்காலப் பாண்டியப் பேரரசின் முதல்வனான சடையவர்மன் குலசேகரபாண்டியன். நெட்டூர்ப் போரில் வீரபாண்டியனைச் சிறைப்படுத்தி தலை துணிந்தபின் சோழர் வெற்றிக் கம்பம் நாட்டினர்.
சடையவர்மன் குலசேகர பாண்டியன்
சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1180-1217) பட்டத்துக்கு வந்தவுடனேயே தான் ஒரு பேரரசை நிலைநாட்ட வந்தவன் என்பதைக் காட்டிக் கொண்டான். அவன் கல்வெட்டுக்கள் வீரப் பரணி பாடுகின்றன.
“வஞ்சினங் கூறும் மதகளி றிவர்ந்த, வெஞ்சின வேங்கை வில்லுடன் ஒளிப்ப" என்று அவன் சோழ சேர மரபுகளுக்கு மேற்பட, தன் மரபை உயர்த்திக் கூறினான். அவன் வீராபிஷேகம்