தென்னாடு 105
1253-ல் பாண்டியப் பேரரசின் எல்லை கர்நூல், திராட்சாராமம் வரை எட்டிற்று.
தெலுங்கு சோட அரசன் கண்டகோபாலனையும், காகதிய மரபின் அரசன் கணபதியையும், பிற தெலுங்கு அரசரையும் அவன் முடுகூர் என்ற இடத்தில் வென்றான்.
ஆட்சி இறுதியில் அவன் பேரரசனாக நெல்லூரில் வீராபிஷேகம் செய்து கொண்டான்.
‘எம்மண்டலமும் கொண்டருளியவன்’ 'மகாராஜாதி ராஜ ஸ்ரீ பரமேசுவரன்' ஆகியவை அவன் விருதுப் பெயர்கள்.
போர்களில் சூறையாடிய செல்வக் குவியல்களையும் சேரர், கன்னடர், இலங்கையரிடமிருந்து திறையாகப் பெற்ற பொன்மணிகளையும் செலவு செய்து அவன் சிதம்பரத்திலுள்ள சிவன் கோவிலுக்கும், சீரங்கத்திலுள்ள திருமால் கோவிலுக்கும் பெருஞ்சிறப்புகள் செய்தான். சீரங்கக் கோவிலை அவன் பொன்னால் வேய்ந்ததனால் ஹேமச்சாதன ராஜா என்று தன்னைக் குறித்துக் கொண்டான்.
பிற்காலப் பாண்டியன்
சடையவர்மன் குலசேகரன் (1252-1275) சுந்தர பாண்டியன் காலத்திலேயே அவன் இளவலாயிருந்து ஆண்டான் என்று கூறலாம். ஏனெனில், அவன் காலத்திலேயே பாண்டிய மண்டலத்துக்குட்பட்டு இவன் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. காரிக்களம் என்ற இடத்துப் போரில் அவன் இலங்கையில் இரண்டு அரசரை வென்று, கோணம்பி, திரிகூடமலை ஆகிய இடங்களில் பாண்டியரின் இணை கயல் கொடியை நாட்டினான்.
மாறவர்மன் குலசேகரன் (1268-1312) சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1276-1292) ஆகிய இருவரும் ஒரே காலத்தில் ஆண்ட பேரரசர்கள்.
சேரன், சோழன், ஹொய்சளர் ஆகியவர்களை வென்று திறைகொண்டு அவற்றால் குலேசகரன் திருநெல்வேலி மதிற்சுவர்களைச் செப்பம்செய்து உயர்த்தினான். கண்ணனூரில் அவன் வென்று போரிட்டு அப்பகுதியை வென்றான். இப்போரில்