உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிட நாடு 155

மொழிவழி, இன வழி, நாகரிகவழி-எவ்வழி பார்த்தாலும் சிறியபெரிய மொழிகள், மொழியினங்கள், இனக் கூட்டுறவுகளின் கதம்ப கூளங்கள், அவியல் கும்பல்களாகவே உள்ளனர். அதில் தனிநாடு கோரும் திராவிடநாடு போலவே, தனி வாழ்வு கோரும் நாகர் முதலிய பல்வேறு இனத்தினர் விலங்குக் காட்சிசாலையில் அடைபட்டுக் கிடப்பதுபோலக் கிடந்துழல்கின்றனர். இப்பெரும்பரப்பை ஒரு கண்டமென்று சிலரும், கண்டமன்று, ஒரு சிறு உலகம் என்று சிலரும் கூறுவது இதனாலேயே.